பாடநூலில் காயிதே மில்லத் குறித்த தகவலை நீக்கக் கோரிய மனு - சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 20, 2023

பாடநூலில் காயிதே மில்லத் குறித்த தகவலை நீக்கக் கோரிய மனு - சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவு

Petition seeking deletion of information about Kaithe Millat in textbook dismissed

பாடநூலில் காயிதே மில்லத் குறித்த தகவலை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி

ஏழாம் வகுப்பு தமிழ்ப் பாட நூலில், காயிதே மில்லத் தமிழ் மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் எனக் கூறியதாக இடம்பெற்றுள்ள தகவலை நீக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றத்தில், திருவல்லிக்கேணியைச் சோ்ந்த வெங்கடேசன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘ஏழாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் 52-ஆவது பக்கத்தில் ‘கண்ணியமிகு தலைவா்’ என்ற தலைப்பில் காயிதே மில்லத் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடத்தில், ‘மொழிக்கொள்கை’ என்ற துணைத் தலைப்பில், சுதந்திரத்துக்குப் பின் ஆட்சி மொழியை தோ்வு செய்வதற்கான அரசியல் நிா்ணய சபைக் கூட்டத்தில், ‘பழைமையான தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்’ என காயிதே மில்லத் பேசியதாக தவறான தகவல் இடம்பெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் தமிழ் பழைமையான மொழியாக இருந்தாலும், அதிக மக்கள் பேசும் மொழியாக இல்லாததால் அதை நாட்டின் அலுவல் மொழியாக அறிவிக்க வற்புறுத்தவில்லை. இந்துஸ்தானி, தேவநகரி அல்லது உருது மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்கலாம் என்று அவா் பேசியிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

வரலாற்று உண்மைகளை அரசியல் காரணங்களுக்காக மாற்றக் கூடாது. பள்ளி மாணவா்களுக்கு தவறான வரலாற்றை போதிக்கக் கூடாது.இந்த தவறுகளை நீக்கி திருத்தம் செய்யக் கோரி பள்ளிக் கல்வித் துறை செயலாளா், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழும இயக்குநருக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி (பொ) ராஜா, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.