பள்ளிக்கல்வி - கல்வி சாரா செயல்பாடுகள் - வானவில் மன்றம், வினாடி வினா மன்றம், திரைப்பட மன்றம், இலக்கிய மன்றம் - போட்டிகள் நடத்துதல் - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 11, 2023

பள்ளிக்கல்வி - கல்வி சாரா செயல்பாடுகள் - வானவில் மன்றம், வினாடி வினா மன்றம், திரைப்பட மன்றம், இலக்கிய மன்றம் - போட்டிகள் நடத்துதல் - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - கல்வி சாரா செயல்பாடுகள் - வானவில் மன்றம், வினாடி வினா மன்றம், திரைப்பட மன்றம், இலக்கிய மன்றம் - போட்டிகள் நடத்துதல் - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - School Education - Extra-curricular Activities - Rainbow Forum, Quiz Forum, Film Forum, Literary Forum - Conduct of Competitions - Procedures to be followed - Procedures of Commissioner of School Education

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்க வெவ்வேறு காலகட்டங்களில் இலக்கியம், கவின்கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்தன. கொரோனா பெருந்தொற்றால் கடந்த சில ஆண்டுகளாக இம்மன்றங்கள் செயல்படாத நிலையில் அவற்றைப் புதுப்பித்து சிறப்பாகச் செயல்பட வழிவகை செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

2022-2023ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மன்றச் செயல்பாடுகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் பார்வை (3)-ல் காணும் செயல்முறைகளின்படி இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போன்றவற்றை ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவி ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாவட்ட அளவில் நடைபெறும் சிறார் திரைப்படம், இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் வானவில் மன்றம் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகள் மற்றும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும், அதில் வெற்றி பெறுபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு அளிக்கப்படும். அரசு பள்ளிகளில் பயிலும் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்கள் 7369 பங்கேற்கும் வகையில் எந்தவொரு பள்ளியும் விடுபடாமல், போட்டிகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து வகைப் போட்டிகளிலும் ஒருசில குறிப்பிட்ட மாணவர்களே வெற்றிபெறும் வகையில் அல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு மாணவரிகள் வெற்றிபெறும் வகையில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி, வட்டார, மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற வேண்டிய கால அட்டவணை இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி நடத்திடப்பட வேண்டும். என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிலையிலும் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களின் விவரங்களை இணைப்பு 3-ல் கண்டுள்ள இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பள்ளியளவில் /ஒன்றிய அளவில்/மாவட்டஅளவில் நடக்கும் போட்டிகள் குறித்த தகவல்கள், புகைப்படங்கள், வெற்றியாளர்களின் விவரங்கள், சிறப்பு விருந்தினர்களின் விவரங்கள் போன்றவற்றை முழுமையாக ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி மாவட்ட திட்டஅலுவலகத்தில் உள்ள ஊடக ஆவணப்படுத்தும் ஒருங்கிணைப்பாளர்(MDO) மற்றும் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் (PRO), பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் அனைத்து மன்றச் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் சிறப்பாக செயல்படுத்திடவும் பள்ளி அளவில் பொறுப்பு அலுவலராக சம்மந்தப்பட்ட மன்றத்தின் பொறுப்பு ஆசிரியர்/ தலைமை ஆசிரியரும், ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளரும் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு பொறுப்பு அலுவலராக முதன்மைக் கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளரும் பொறுப்பேற்றுக் கொண்டு போட்டிகளை சிறப்பான முறையில் நடத்திட அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.