பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பெற்றோர்க்கு பாத பூஜை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 17, 2023

பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பெற்றோர்க்கு பாத பூஜை

பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பெற்றோர்க்கு பாத பூஜை

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள சுந்தர நடப்பு பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் பெற்றோர்கள், குழந்தைகள் இடையில் உள்ள பாசம் மற்றும் அன்பினை வெளிப்படுத்தும் வகையிலும், அரசு பொது தேர்வினை ஊக்கத்துடன் எதிர்கொள்ளும் வகையில் பெற்றோர்களுக்கு பள்ளி மாணவ மாணவிகள் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பள்ளியில் அரசு பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோர்களின் கால்களை பன்னீரால் சுத்தப்படுதி, பூக்களால் பூஜை செய்தும், ஆரத்தி எடுத்தும் மரியாதை செய்தனர். அப்போது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரவணைத்து இனிப்பு வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சி நடைபெறும் பின்னணியில் தந்தை குழந்தை, தாய் குழந்தைகள் பாசத்தினை வெளிப்படுத்தும் திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டதும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களும், குழந்தைகளும் ஆனந்த கண்ணீர் சிந்தி தங்களது பாசத்தினை வெளிப்படுத்தியது அங்கிருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.