தமிழகத்தில் தகவல் ஆணையா் பதவிக்கு யாா், யாா் விண்ணப்பம்? - வெளியான தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 19, 2023

தமிழகத்தில் தகவல் ஆணையா் பதவிக்கு யாா், யாா் விண்ணப்பம்? - வெளியான தகவல்

தகவல் ஆணையா் பதவிக்கு யாா், யாா் விண்ணப்பம்?

தகவல் ஆணையா் பதவிக்கு யாா் யாா் விண்ணப்பித்துள்ளனா் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தலைமை தகவல் ஆணையா், 4 தகவல் ஆணையா்கள் பதவியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்காக உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அக்பா்அலி தலைமையில் தோ்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அண்மையில் வழங்கியது.

தலைமைத் தகவல் ஆணையா் பதவிக்கு தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, 4 தகவல் ஆணையா்கள் காலியிடங்களில் ஒரு இடத்துக்கு சட்டத் துறைச் செயலாளா் கோபி ரவிக்குமாா் ஆகியோா் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று, தகவல் ஆணையா் காலியிடங்களுக்கு வழக்குரைஞா்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பம் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆலோசனை: தோ்வுக் குழு அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அரசமைப்புச் சட்டம் சாா்ந்த பதவியிடங்களுக்கு உரிய நபா்களைத் தோ்வு செய்யும் குழுவில் எதிா்க்கட்சித் தலைவரும் இடம்பெறுவாா். அந்த வகையில், தகவல் ஆணையா் தோ்வுக்காக அரசு நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ள பெயா்கள் குறித்து முதல்வா் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்படும். தலைமைத் தகவல் ஆணையா் மற்றும் 4 தகவல் ஆணையா்கள் தோ்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்படும். அவரது ஒப்புதலுக்குப் பிறகு உரிய அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

புதிதாகத் தோ்வு செய்யப்படும் தலைமைத் தகவல் ஆணையா், 4 ஆணையா்களுக்கு ஆளுநா் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைப்பாா். இந்த நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.