பழைய ஓய்வூதிய திட்டம்.. உயிரைக் கொடுத்து போராடும் அரசு ஊழியர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 20, 2023

பழைய ஓய்வூதிய திட்டம்.. உயிரைக் கொடுத்து போராடும் அரசு ஊழியர்கள்



பழைய ஓய்வூதிய திட்டம்.. உயிரைக் கொடுத்து போராடும் அரசு ஊழியர்கள் - Old pension scheme.. Government employees who are fighting with their lives

📚இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் இப்போது பழைய பென்சன் திட்டம் அமலில் இல்லை. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்ற CPS திட்டமும் தேசிய பென்சன் திட்டமும்தான் அமலில் உள்ளது. ஆனால் பழைய பென்சன் திட்டம்தான் தங்களுக்கு வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 📚தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்காக உண்ணா விரதப் போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம், நடை பயண போராட்டம் எனப் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி விட்டனர்.

📚தமிழகத்தைப் பொறுத்தவரையில், நீண்ட காலமாகவே அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுக்கின்றன. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் ஏதேதோ காரணம் கூறி அமல்படுத்த மறுப்பதாக அரசு ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசும் தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதி கொடுத்திருந்தது.

📚பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தும் கோரிக்கைகள் நாடு முழுவதும் பரவலாக இருந்தாலும் சில பொருளாதார நிபுணர்கள் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறுகின்றனர். அதேபோல ரிசர்வ் வங்கியும் பழைய பென்சன் திட்டத்தால் நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளது. 📚ஆட்சியில் இருக்கும் கட்சிகள் இல்லாமல், எதிர்க்கட்சிகளும் மற்ற கட்சிகளும் பழைய பென்சன் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஆதரவு வலுத்துள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பரவலாக இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

📚பழைய பென்சன் திட்டத்துக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் ஒரு சில மாநிலங்கள் இத்திட்டத்தை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அமல்படுத்திவிட்டன. ராஜஸ்தான், சத்தீஷ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் வரிசையில் இமாசலப் பிரதேசமும் இணைந்துள்ளது.

📚தமிழகத்தைப் போலவே ஹரியானா மாநிலத்திலும் பழைய பென்சன் திட்டத்துக்காக அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பஞ்ச்குலா பகுதியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டின் இறுதியில் அங்கு தேர்தல் நடைபெறவிருப்பதால் அதற்கு முன்பாக, ஊழியர்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.