தேசிய ஓய்வூதிய திட்ட நிதி மாநிலங்களுக்கு வழங்க முடியாது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 20, 2023

தேசிய ஓய்வூதிய திட்ட நிதி மாநிலங்களுக்கு வழங்க முடியாது

தேசிய ஓய்வூதிய திட்ட நிதி மாநிலங்களுக்கு வழங்க முடியாது - National Pension Scheme funds cannot be given to states

தேசிய ஓய்வூ தியத் திட்டத்திற்காக, 'டெபாசிட்' செய்யப்பட்ட நிதியை, தற்போதைய சட் டத் தின்படி, மாநில அரசு களுக்கு வழங்க முடியாது என, மத்திய அரசு நேற்று மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.

"தேசிய ஓய்வூதிய திட்டத்திற்காக டெபாசிட் செய்யப்பட்ட நிதியை, தங்களுக்குத் திருப்பித் தரலாம் என்று எந்த மாநில மாவது எதிர்பார்த்தால், அது சாத்தியமற்றது" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதியமைச்சக செயலர் விவேக் ஜோஷி ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித் துள்ளனர்.

புதிய ஓய்வூதியத் திட் டத்தில் உள்ள பணம், ஊழியர்களுடன் தொடர் புடையது. அது ஊழிய ருக்கும் புதிய ஓய்வூதிய திட்ட அறக்கட்டளைக்கும் இடையிலான ஒப்பந் தத்தின் கீழ் உள்ளது. முதிர் வுக்கு முன்பாகவோ, ஓய்வு பெறும் வயதை அடைவ தற்கு முன்பாகவோ, ஊழி யர்கள் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால், அதற் கென பல்வேறு விதிகள் உள்ளன. ஆனால் மாநில அரசுகள் பெறுவதற்கு, தற்போதைய சட்டத்தில் இடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.