ஜாக்டோ - ஜியோ (JACTTO - GEO) - மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை மாநாடு - நாள் :19.02.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 14, 2023

ஜாக்டோ - ஜியோ (JACTTO - GEO) - மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை மாநாடு - நாள் :19.02.2023

ஜாக்டோ - ஜியோ (JACTTO - GEO) - மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை மாநாடு - நாள் :19.02.2023 JACTTO - GEO - Demand Conference in District Capitals - Date :19.02.2023

ஜாக்டோ - ஜியோ (JACTTO - GEO) தருமபுரி மாவட்டம்.

பழைய ஓய்வூதியம், அகவிலைப்படி, வரையறுக்கப்பட்ட ஊதியம், சரண்டர் போன்ற வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்க, அத்துக்கூலி கொத்தடிமை முறையை ஒழித்துக்கட்ட, மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை மாநாடு

நாள் :19.02.2023 ஞாயிற்றுக்கிழமை - மதியம் 02.00 மணி இடம்: பெரியார் மன்றம், தருமபுரி.

அன்பிற்கினிய தோழர்களே. வணக்கம்,

AG ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள்-அரசுப்பணியாளர்கள்., அரசின் பொக்கிஷங்களாக கருதப்பட்ட நிலைமாறி தீவிர தனியார்மய நடவடிக்கையால் மத்திய-மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் வெட்டி சுருக்கப்பட்டதின் விளைவாக நம் கோரிக்கைகள் மீது கண்டுகொள்ளாத போக்கு நிலவுகிறது. சுருங்கக்கூறின் "கார்ப்பரேட் நலன்" மட்டுமே என்ற ஒற்றை நிலையை நோக்கி ஆட்சியாளர்கள் மாறி உள்ளனர்.

கடந்த காலங்களில் நாம் நடத்திய ஒன்றுபட்ட போராட்டங்களே நம்முடைய கோரிக்கைகளை நாம் வென்றெடுத்துள்ளோம்.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்" என தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் மற்றும் நம் மாநாட்டில் கலந்துகொண்டு அதன் மூலம் கொடுத்த வாக்குறுதிகள் இவைகளை நிறைவேற்ற மாண்புமிகு முதலமைச்சர் என்று ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முடிவன்படி வருகின்ற 19.02.2023 அன்று மதிலம் முழுவதம் நடைபெற உள்ள மாவட்ட மாநாடுகளின் ஒருபகுதியாக தருமபுரியில் வரும் ஞாயிற்றுக்கிழமை 19.02.2023 அன்று மதியம் 02.00 மணியளவில் பெரியார் மன்றத்தில் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரல்படி நடைபெற உள்ள மாவட்ட மாநாட்டில் அனைத்துப்பகுதி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்- அரசுப்பணியாளர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். கோரிக்கைகள்

இவண் : ஜாக்டோ -ஜியோ, தருமபுரி மாவட்டம்.

* பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

* முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

* இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

* தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர், கணினி இயக்குபவர், G வருவாய் கிராம உதவியாளர், ஊர்புற நூலகர் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சாலை பணியாளர்களுக்கு 41-மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.

* சுமார் 6-லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

* ஊதிய மாற்றம் - 21-மாத நிலுவைத் தொகையை உடன் வழங்கிட வேண்டும்.

மாண்புமிகு முதல்வர் பங்கேற்ற வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதல்வரிடம் ஜாக்டோ-ஜியோ சார்பில் வழங்கப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர் மற்றும் துறை பிரிவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகள்....

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.