வருமான வரி சட்டம் Sec 10(10) D சொல்வது என்ன??? அதில் வரக்கூடிய மாற்றம் என்ன??? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 7, 2023

வருமான வரி சட்டம் Sec 10(10) D சொல்வது என்ன??? அதில் வரக்கூடிய மாற்றம் என்ன???

வருமான வரி சட்டம் Sec 10(10) D சொல்வது என்ன??? அதில் வரக்கூடிய மாற்றம் என்ன??? What does Income Tax Act Sec 10(10) D say??? What is the possible change in it???

ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் இருந்து பெறப்படும் டெத் பெனிஃபிட் ( Death Benefit ) ,போனஸ் தொகை, முதிர்வுத் தொகை ( Maturity Amount) உள்ளிட்ட பண பயன்கள் அத்தனைக்கும் எந்த ஒரு உச்ச வரம்பும் இன்றி, வருமான வரி சட்டம் Sec 10(10) D யின் கீழ் முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது , உதாரணத்திற்கு முதிர்வுத் தொகை ஒருகோடி , இரண்டு கோடி , ஏன் முதிர்வுத் தொகை 100 கோடியாக இருந்தாலும் ஒரு ரூபாய் கூட வருமான வரியாக செலுத்தப்பட வேண்டியது இல்லை , முதிர்வுத் தொகை முழுமைக்கும் வருமான வரி விலக்கு கிடைக்கும் , என்பதே ஆயுள் காப்பீட்டு திட்டங்களுக்கு பிரிவு 10(10)D அளித்திருக்கும் ஓர் வரப்பிரசாதம் !!!

நம்மில் பெரும்பாலானோர் இதன் நன்மையை இவ்வளவு நாள் முழுமையாக உணராமலே , இருந்திருக்கின்றோம் !!!

தற்போது 2023- 24 பட்ஜெட் கூட்டத் தொடரில் பெரும் நன்மை அளித்து வந்த sec 10(10) D யில் மாபெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் கோடிக்கணக்கான பெரும் தொகை ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு , முதிர்வு தொகையாக பல கோடிக்கணக்கான தொகைக்கு வரி விலக்கு பெறுகின்றனர் , என அரசு கருதுகிறது அதை தடுக்கும் நோக்கில் , ஒரு நபர் , ஒரு ஆண்டில், ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் ஐந்து லட்சம் வரை செய்யப்படும் முதலீட்டுக்கு மட்டுமே sec 10 (10)D யின் கீழ் , போனஸ், மற்றும் முதிர்வு தொகைக்கு முழுமையான வரி விலக்கு கிடைக்கும் !! ( குறிப்பு : செலுத்திய பிரிமியம் தொகைக்கு முன்னரே எந்த ஒரு வரி சலுகையும் பெற்று இருக்க கூடாது E.g Sec 80c )

ஓர் ஆண்டில் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் தொகை 5 லட்சத்தை தாண்டினால், முதிர்வுத் தொகையில் செலுத்தப்பட்ட மொத்த பிரிமியம் தொகை நீங்கலாக கிடைக்கும் லாபத்திற்கு " Income From Other Sources" என்ற வகையில் வருமான வரி செலுத்த வேண்டும் !!! அது அதிகபட்சம் 30% + surcharges என்ற அளவிலும் இருக்கும் !!! ஆண்டு பிரிமியம் 5 லட்சத்தை தாண்டி இருந்தும் , பாலிசிதாரர் இறந்து விட்டால் கிடைக்கும் Death Benefit க்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை, Death Benefit க்கு முழுமையான வருமான வரி விலக்கு உண்டு!!!

மேற்கூறிய மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து உடனடியாக அமலுக்கு வர உள்ளது , அதுவரை அதாவது 31st March 2023 வரை ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு எந்த ஒரு உச்சவரம்பும் கிடையாது, அதில் இருந்தது கிடைக்கும் முதிர்வு தொகைக்கும் எந்த ஒரு உச்ச வரம்பும் இன்றி முழுமையான வரி விலக்கும் கிடைக்கும் !!!

ஆகவே நண்பர்களே Sec 10 (10) D யின் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும், அதனால் கிடைக்கும் மாபெரும் நன்மைகளையும், பயன்களையும் உங்கள் உற்றார் ,உறவினர், நண்பர்கள், என அனைவருக்கும் தெரியப்படுத்தி , 5 லட்சம் மற்றும் அதற்கு மேல் இன்றே முதலீடு செய்து அவர்கள் வாழ்நாளெல்லாம் வருமான வரி இல்லாத, போனஸ் மற்றும் முதிர்வு தொகை பெற்று பயன்பெற உதவிடுவோம் !!!!

கைவசம் 54 நாட்கள் மட்டுமே உள்ளது விரைந்து செயல்படுவோம் !!!!

2 comments:

  1. 10 10D இப்படிச் சொல்லவில்லை. தற்போது முதிர்வுத் தொகையிலிருந்து sum assuredஐக் கழித்து விட்டு மிஞ்சியுள்ள தொகையின் மீது வரி வசூல் நடை பெற்று வருகிறது அல்லவா,?

    ReplyDelete
  2. என் பெயர் சாஸ்தாமணி. சியாமளா அல்ல.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.