அரசு பள்ளிகளில் தேசிய விருது படம் திரையிடல் சிறார் படங்கள் மாணவர் மனதில் மாற்றத்துடன் ஏற்றம் தரும் - *கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 13, 2023

அரசு பள்ளிகளில் தேசிய விருது படம் திரையிடல் சிறார் படங்கள் மாணவர் மனதில் மாற்றத்துடன் ஏற்றம் தரும் - *கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

அரசு பள்ளிகளில் தேசிய விருது படம் திரையிடல் சிறார் படங்கள் மாணவர் மனதில் மாற்றத்துடன் ஏற்றம் தரும் - *கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

Screening of National Award Films in Govt Schools Juvenile Films Bring Change in Student Mindset - *Educators, Environmentalists

அரசு பள்ளிகளில் தேசிய விருது படம் திரையிடல் சிறார் படங்கள் மாணவர் மனதில் மாற்றத்துடன் ஏற்றம் தரும்

*கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்க

ள் நம்பிக்கை

தமிழக அரசின் சிறார் திரைப்பட விழா எனும் பெயரில் அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் திரையிடப்படும் திரைப்படங்கள் கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை பல்வேறு புதிய முயற்சிகளை அரசுப் பள்ளிகளில் நிகழ்த்தி வருகிறது. சமீபத்தில் 6 முதல் 12 வகுப்புகள் வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை கலைத் திருவிழா எனும் பெயரில் நடத்தி மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி எனும் பட்டத்தை தமிழக முதல்வர் சூட்டி மாணவர்களின் கலை ஆர்வத்தினை உற்சாகப் படுத்தினார். அந்த வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் வாயிலாக மாணவர்கள் மனதுள் பல நேர்மறை எண்ணங்களை விதைக்கும் நோக்கில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை “சிறார் திரைப்பட விழா” எனும் பெயரில் மாதந்தோறும் ஒரு படம், மாணவர் மனதுள் பெரும் பாடம் என்ற வகையில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டு வருகின்றன.

அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் செப்டம்பரில் அக்கா குருவி!, அக்டோபரில் தி ரெட் பலூன், நவம்பரில் குப்பச்சிகளு, டிசம்பரில் ஸ்வாஷ் ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு மாணவர் களிடையே கலந்துரையாடலும் அந்த படங்கள் குறித்த விமர்சனங்களும் சேகரிக்கப்பட்டன.

இந்த மாதம் பிப் 13 முதல் 17 வரை ஏதேனும் ஒரு நாளில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வை மையப்படுத்தி 1999 ல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக தேசிய விருது பெற்ற “மல்லி” எனும் குறும்படம் திரையிடப்பட உள்ளது. இந்த சிறார் பட திருவிழா குறித்து கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக் குழு உறுப்பினரும், தலைமை ஆசிரியருமான தங்கபாபு கூறுகையில்,படங்கள் சில நேரங்களில் பாடங்களாக வாழ்வில் மாறி விடுவதுண்டு. தேசத் தந்தை மகாத்மா காந்தி பார்த்த அரிச்சந்திரா நாடகம் அவரின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உண்மை மட்டுமே பேசும் உத்தம ராக உலகிற்கு காட்டியது. இயல்பாகவே மாணவர்களுக்கு திரைப்படங்கள் பிடித்தமான ஒன்று. பிடித்தமான ஒன்று எது சொன்னாலும் அவர்கள் மனது இயல்பாகவே எளிதில் ஏற்றுக் கொள்ளும். படம் பார்த்தலோடு நின்று விடாமல், அந்த படம் குறித்த விமர்சனங்களை மாணவர்கள் எழுதும் போது மொழித்திறன், மொழி ஆளுமை, எழுத்தாற்றல், தனித்த பார்வை, உள் வாங்கல் உள்ளிட்ட திறன்கள் அவர்களிடையே மேம்படுகிறது. மாணவர்கள் மனதுள் நல்ல சிந்தனைகளும், எண்ணங்களும்,மாற்றங்களும் ஏற்பட்டால் அது அவர்களுக்கு மட்டுமல்ல இந்திய தேசத் திற்குமான நலமும், பலமும் பயக்கும் நல்ல விசயம் என்றார்.

இதுகுறித்து திமுக.சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட அமைப்பாளர் மீனாட்சி சூர்யபிரகாஷ் கூறுகையில், இன்றைக்கு உலகில் சுற்றுச்சூழல் பல வகைகளில் மாசடைந்து வருகிறது. சுற்றுச் சூழலை பல வழிகளில் பாதுகா த்து, வரும் தலைமுறைகள் உயிர்கள் ஆரோக்கியமாக வாழும் ஒரு கிரகமாக பூமியை மாற்றித் தருவதுவது தான் உலகில் உள்ள ஒவ்வொருவரின் தலையாய கடமையாக இருக்கிறது.

மாணவர்களிடம் நல்ல விசயங்களை மலர்த்துகிற, நல்ல செயல்களை மீட்டெடுக்கிற ஒரு அற்புதத்தை நிகழ் த்துகிற ஒரு செயலாகவே சிறார் திரைப் பட விழா திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. காலைச் சிற்று ண்டி, வானவில் மன்றம், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், புதுமைப் பெண் என பள்ளிக் கல்வித் துறை நாள்தோறும் நல்ல திட்டங்களை தீட்டி மக்கள் மனதில் தமிழக அரசிற்கு நற்பெயரை வாங்க வைத்துள்ளது. பிப்.13 ல் பள்ளிகளில் திரையிடப்பட இருக்கும் சுற்றுச் சூழல் குறித்த விழிப் புணர்வு தாங்கிய தேசிய விருது பெற்ற “மல்லி” திரைப்படம் திரையிட இருப்பது என் போன்ற சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கு பெரு மகிழ்வைத் தரும் விசயம் என்றார்.பள்ளிகளில் சிறார் திரைப்படங்களைப் பார்த்து, சிறந்த விமர்சனங்கள் எழுதி தேர்வாகியுள்ள பாலையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மகாலெட்சுமி கூறுகையில், பள்ளியில் தோழிகளோடு அமர்ந்து படம் பார்ப்பது பரவசமாக உள்ளது. படம் குறித்து அனைத்து மாணவர்களும் விமர்சனம் எழுத வேண்டும். சிறந்த விமர்சனங்கள் எழுதி ஒன்றிய, மாவட்ட அளவில் வென்று மாநில அளவிலும் வெற்றி பெற்றால் வெளிநாடு சுற்றுலா போகலாம் என்பதால் ஒவ்வொரு படத்தையும் பாடம் படிப்பதைப் போல கூர்மையாகப் பார்க்கிறோம்.

ஒவ்வொரு படங்களும் ஏதேனும் ஒரு வகையில் மனதுக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை தந்து கொண்டே இருக்கிறது. இது எங்களுக்கெல்லாம் புதுவித அனுபவமாகவும் இருக்கிறது என்றார்.

ஒரு முறை எழுதுவது பதினோரு முறை படிப்பதற்கு சமம் என்பார்கள். அது போல்தான், ஒரு முறை பார்க்கிற நல்ல படங்கள் வாழ்நாள் முழுக்க நம் கை களைப் பிடித்த படியே பயணித்து நல்ல வழியைக் காட்டும். அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் திரையிடப்படும் தமிழக அரசின் சிறார் திரைப்பட விழா மாணவர் களுக்கு மாற்றத்தையும், ஏற்றத்தையும் தாங்கி நல் வழியைக் காட்டும் என்றே பலரும் பலமாக நம்புகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.