நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவர்கள் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 17, 2023

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவர்கள் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு செய்தார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு நவீன தொழில் நுட்பங்களில் விருப்பத்திற்கேற்ற வேலைவாய்ப்பினை பெறும் வகையில் முன்னணி தொழில் நிறுவனங்களால் தற்பொழுது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கென தொடங்கப்பட்ட www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் இலவச படிப்புகள், குறைவான கட்டணத்துடன் கூடிய படிப்புகள் மற்றும் பாடத்திட்டத்துடன் கூடிய படிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் 3,50,000 மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களில் திறன் பயிற்சி வகுப்புகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 15 லட்சம் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புக்குரிய திறன் பயிற்சிகளை மாணவ சமுதாயத்திற்கு பலன் அளிக்கும் விதமாக மேலும் மேம்படுத்தவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

மேலும், குறுகிய கால பயிற்சி நிறுவனங்களை ஆய்வு செய்து தரமான பயிற்சிகள் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறும், சிறப்பு திட்டங்கள் மற்றும் பிற துறைகளை சார்ந்த திறன் பயிற்சிகளை முன்னணி நிறுவனங்களோடு இணைந்து வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அமைத்திட வேண்டுமென்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.