+1 Arrear தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 8, 2023

+1 Arrear தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்

+1 Arrear தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்

1. பள்ளித் தலைமையாசிரியர்கள் 22.02.2023 பிற்பகல் முதல் www.dget.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள UserID மற்றும் Password-ஐ பயன்படுத்தி, .1 Arrear தேர்வர்களுக்கு மேல்நிலை முதலாம் ஆண்டு செய்முறைத் தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

2. பார்வையில் காணும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு தற்போது மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் பள்ளி மாணாக்கருக்கான செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்களிலேயே, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளின் போது, செய்முறை புறத்தேர்வில் பங்கேற்காத (Absent) கீழ்காணும் 2 வகை தேர்வர்களுக்கு செய்முறை புறத்தேர்வு நடத்தப்பட வேண்டும்.

1. தங்கள் பள்ளியில் 1 பயின்று, தற்போது .2 பயிலும் மாணவர்கள்.

II. வேறொரு பள்ளியில்/ மாவட்டத்தில் 1 பயின்று, தற்போது தங்கள் பள்ளியில் .2 பயிலும் மாணவர்கள்

3. வேறொரு பள்ளியில்/மாவட்டத்தில் 1 பயின்ற மாணவர்களது, சம்பந்தப்பட்ட பாடங்களின் செய்முறை பதிவேடுகளை (1 Record Book) urofl தலைமையாசிரியர் பெற்றுக் கொண்டு, செய்முறை புறத்தேர்வு நடத்தி மதிப்பெண்கள் வழங்கும் சமயம், செய்முறை பதிவேடுகளுக்கான மதிப்பெண்களையும், திறன் மதிப்பீட்டுக்கான மதிப்பெண்களையும் (3.2) வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

4. இத்தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை பதிவு செய்த மதிப்பெண் பட்டியல்களை தனி கட்டுக்களாக கட்டி அவற்றை அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 11.03.2023-க்குள் ஒப்படைக்கவேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.