M.Phil., பயின்றதற்கு பின்னேற்பு கோரியது - நிராகரிப்பு செய்து ஆணையர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 4, 2023

M.Phil., பயின்றதற்கு பின்னேற்பு கோரியது - நிராகரிப்பு செய்து ஆணையர் உத்தரவு!

M.Phil., பயின்றதற்கு பின்னேற்பு கோரியது - நிராகரிப்பு செய்து மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல ஆணையர் உத்தரவு!
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் (மு.கூ.பொ) அவர்களின் செயல்முறைகள், சென்னை-05

பிறப்பிப்பவர்: முனைவர் இரா. நந்த கோபால், இ.ஆ.ப. செ.மு. எண். பி2/39 /2021

நாள். 03.01.2023

பொருள்:

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் - பட்டதாரி . முதுகலை பட்டதாரி (ம) தலைமையாசிரிகள்- எம்பில் உயர்கல்வி அனுமதி பெறாமல் பயின்றது - பின்னேற்பு- கோரியது- வழக்கு தொடர்ந்தது- நிராகரித்து உத்திரவிடுதல்- தொடர்பாக.

பார்வை :

1. கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநரின் கடித எண். எச்3 / 1055/2019. 18.12.2020, 10.03.2021 (u) 22.12.2022

2. மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தீர்ப்புரை WP (MD) 7142/2021 நாள். 29.03.2021

3.இவ்வலுவலக கடித எண். பி2 / 39 / 2021 நாள். 16.08.2021

4. அரசாணை எண். 37 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள். 10.03.2020

5. அரசாணை எண். 116 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள். 15.10.2020

6. மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எண்.Contempt P. No. 1042 / 2022

ஆணை:

மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு கள்ளர் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி / முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உயர்கல்வி தேர்ச்சி பெற்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்க கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்ததையடுத்து பின்வரும் தீர்ப்பு வரப்பெற்றது.

வழக்கு பார்வை 2ல் காணும் தீர்ப்புரையின் பத்தி 4ல் "By applying the ratio held in the aforesaid decision as well as various other decisions, on the same line, it can be said that the petitioners herein I would be entitled for incentive increments for having possessed higher. educational qualifications, even though they had not obtained prior permission of the Authorities for having undergone the course for such higher education. 5. In the light of the above observation, the third respondent herein, shall positively consider the proposal sent by the fourth respondent, recommending the candidature of the petitioners herein for grant of incentive increments for having possessed their higher educational degree, if not otherwise disqualify, in the line of the observations made by this court and extedn the benefit of incentive increment, atleast with in a period of eight weeks from the date of receipt of the proposal"

எனவே, கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி, முதுகலை பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் எம்பில் உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி உரிய விவரங்களுடன் விண்ணப்பிக்காத காரணத்தாலும், உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்காத காரணத்தாலும் மாணவர் நலன் மற்றும் நிர்வாக நலன்கருதி சம்மந்தப்பட்ட பட்டதாரி, முதுகலைபட்டதாரி தலைமையாசிரியர்களுக்கு எம்பில் உயர்கல்வி அனுமதி வழங்க வழிவகை இல்லை எனத் தெரிவித்த கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநரின் 19.12.2016 நாளிட்ட செயல்முறையினை ஏற்றும், நீதிமன்ற தீர்ப்பாணை (ம) அரசாணை ( நிலை) எண். 37 பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை நாள். 10.03.2020 படி பின்னேற்பு வழங்கக்கோரிய ஆசிரியர்களின் கோரிக்கையினை நிராகரித்தும் உத்திரவிடப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.