ஜாக்டோ ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - கோரிக்கைகள்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 3, 2023

ஜாக்டோ ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - கோரிக்கைகள்!!

ஜாக்டோ-ஜியோ (JACTTO - GEO) (Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Exmployees Organisations)

இராணிப்பேட்டை மாவட்டம்.

தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மாவட்ட தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாள்: 05.01.2023 வியாழக்கிழமை

நேரம் : மாலை 5.00 மணி

இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இராணிப்பேட்டை.

அன்பார்ந்த ஆசிரியர் - அரசு ஊழியர்களே வணக்கம் !

அரசு பொறுப்பேற்று ஓராண்டு கடந்த சூழலில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

26.12.2022 அன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வருகின்ற 2023 ஜனவரி 05 அன்று ஜாக்டோ - ஜியோ சார்பாக மாவட்ட தலை நகரிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து ஆசிரியர் - அரசு ஊழியர், பணியாளர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கோரிக்கைகள் : தமிழக அரசே !

ஜாக்டோ-ஜியோ இராணிப்பேட்டை மாவட்டம்,

• தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை உடனடியாக அமுல்படுத்திடு... • இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை கலைந்திடு.

காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பினை உடனே வழங்கிடு...

1.07.2022 முதல் 4 விழுக்காடுக்கான 6 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்கிடு... • ஆசிரியர் அரசு ஊழியர், பணியாளர் விரோத அரசாணைகளை கைவிடு...

• தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள்,சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், MRB செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட இன்னும் பிற துறைகளில் அத்துக்கூலிக்கு பணி செய்கின்ற அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிடு.

• ஒப்பந்தம்,புற ஆதார முகமை (OUT SOURCE) முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிடு.

• சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்திடு. 21 மாத ஊதியமாற்று நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிடு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.