தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர்த் திட்டம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய பாதாள சாக்கடைத் திட்டம், பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் நீர் நிலைகளை மேம்படுத்துதல் பணிகளுக்கு ரூ.1083.18 கோடி நிதி ஒதுக்கீடு - செய்தி வெளியீடு எண்: 173 - நாள்: 25.01.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 25, 2023

தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர்த் திட்டம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய பாதாள சாக்கடைத் திட்டம், பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் நீர் நிலைகளை மேம்படுத்துதல் பணிகளுக்கு ரூ.1083.18 கோடி நிதி ஒதுக்கீடு - செய்தி வெளியீடு எண்: 173 - நாள்: 25.01.2023

செய்தி வெளியீடு எண்: 173 - நாள்: 25.01.2023 Allocation of Rs.1083.18 Crores for Drinking Water Scheme, Underground Sewerage Scheme with Sewage Treatment Plant, Construction of Green Spaces and Parks and Improvement of Water Levels in Tamil Nadu Urban Local Bodies - Press Release No: 173 - Date: 25.01.2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர்த் திட்டம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய பாதாள சாக்கடைத் திட்டம், பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் நீர் நிலைகளை மேம்படுத்துதல் பணிகளுக்கு ரூ.1083.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள்.

முதலமைச்சர் அவர்களின் மாண்புமிகு தமிழ்நாடு அறிவிப்பு-2021-2022, மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கை எண்.34 (2021-2022 மற்றும் 2022 – 2023) ஆகியவற்றில் தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர்த் திட்டம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய பாதாள சாக்கடைத் திட்டம், பசுமை வெளிகள், பூங்காக்கள் அமைத்தல் மற்றும் நீர் நிலைகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள சட்டப்பேரவையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கையினை தொடர்ந்து அம்பாசமுத்திரம் நகராட்சியின் குடிநீர்த் திட்டம், சிதம்பரம் நகராட்சியின் குடிநீர்த் திட்டம், துறையூர் நகராட்சியின் குடிநீர்த் திட்டம், ஓசூர் மாநகராட்சியின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் கூடிய பாதாள சாக்கடைத் திட்டம், தூத்துக்குடி மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் திருவேற்காடு, வந்தவாசி, ஜோலார்பேட்டை, வேதாரண்யம், அறந்தாங்கி உள்ளிட்ட நகரங்களில் 72 பசுமைவெளிகள் மற்றும் பூங்காக்களை அமைத்தல் மற்றும் குன்றத்தூர், வடலூர், இராஜபாளையம், முசிறி, இராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களில் 54 நீர்நிலைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, அம்பாசமுத்திரம் குடிநீர்த் திட்டம் ரூ.36.60 கோடி திட்ட மதிப்பீட்டிலும், சிதம்பரம் குடிநீர்த் திட்டம் ரூ.143.19 கோடி திட்ட மதிப்பீட்டிலும், துறையூர் குடிநீர்த் திட்டம் ரூ.108.90 கோடி திட்ட மதிப்பீட்டிலும், ஓசூர் மாநகராட்சியில் இரண்டு கழிவு நீர் சுத்திகிரிப்பு நிலையங்களுடன் கூடிய பாதாளச்சாக்கடை திட்டம் ரூ.574.96 கோடி திட்ட மதிப்பீட்டிலும் தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள் சாக்கடைத்திட்டம் ரூ.152.14 கோடி திட்ட மதிப்பீட்டிலும், திருவேற்காடு, வந்தவாசி, ஜோலார்பேட்டை, வேதாரண்யம், அறந்தாங்கி உள்ளிட்ட நகரங்களில் 72 பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்கள் அமைப்பதற்கு ரூ.27.80 கோடி மதிப்பீட்டிலும், குன்றத்தூர், இராஜபாளையம், முசிறி, இராமேஸ்வரம் உள்ளிட்ட வடலூர், நகரங்களில் 54 நீர் நிலைகளை மேம்படுத்துவதற்கான பணிகள் ரூ.39.59 கோடி மதிப்பீட்டிலும் ஒட்டு மொத்தமாக ரூ.1083.18 கோடியில் ஒன்றிய அரசு மானியமாக ரூ.361.68 கோடியும், மாநில அரசு மானியமாக ரூ.294.60 கோடியும் உள்ளாட்சிகளின் பங்களிப்பாக ரூ.426.90 கோடியும் உள்ளடக்கி நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 131 பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

தலைமைச் செயலகம், சென்னை-9

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.