1.06.2009க்குப் பிறகு பணியில் சேர்ந்த சுமார் 14,000 முதுகலை ஆசிரியர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, December 31, 2022

1.06.2009க்குப் பிறகு பணியில் சேர்ந்த சுமார் 14,000 முதுகலை ஆசிரியர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம்?

Equal pay for equal work for about 14,000 post-graduate teachers who joined after 1.06.2009? 1.06.2009க்குப் பிறகு பணியில் சேர்ந்த சுமார் 14,000 முதுகலை ஆசிரியர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம்?

*DRPGTA 01.01.2023*

*தமிழக அரசே!*

*01.06.2009க்குப் பிறகு பணியில் சேர்ந்த சுமார் 14,000 முதுகலை ஆசிரியர்களுக்கும்

*சம வேலைக்கு*

*சம ஊதியம் கொடு*

✍️✍️✍️✍️✍️✍️✍️

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையில்

01.06.2009 க்குப் பிறகு பணியில் சேர்ந்த சுமார் 14, 000 முதுகலை ஆசிரியர்கள் பெரிதும் ஊதிய முரண்பாடுகளுடன் பணிபுரிந்து வருகின்றனர்

✍️✍️✍️✍️✍️✍️

இது சார்ந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் ஏற்கனவே எங்களது அமைப்பு சார்பாக இது பற்றிய விரிவான கோரிக்கை மனுவை அனுப்பி இருக்கிறோம்

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

தொடர்ந்து எங்கள் வழிகாட்டலில் 01.06.2009க்குப் பிறகு பணியில் சேர்ந்த நூற்றுக்கணக்கான நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் தர வேண்டி தங்கள் கோரிக்கைகளை ஆசிரியர் மனசு பிரிவுக்கு மனுவாக அனுப்பி உள்ளனர்.

தற்பொழுதும் அனுப்பி வருகின்றனர்.

✍️✍️✍️✍️✍️✍️✍️

ஏற்கனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட சித்திக் ஐஏஎஸ் குழு முன்பாகவும்

நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழு முன்பாகவும்

01.06.2009 க்குப் பின் பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களின்

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டி

நேரில் சென்று கோரிக்கை மனுவையும் விளக்கத்தையும் கொடுத்து இருக்கிறோம்.

ஆனாலும் இதுநாள் வரை முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு இன்னும் களையப்படவில்லை

✍️✍️✍️✍️✍️✍️

இந்த நிலையில் தற்போது சென்னையில் இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரதத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், மதிப்பிற்குரிய பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் சம வேலைக்கு சம ஊதியம் கொடுப்பது தொடர்பான கோரிக்கையை ஆய்வு செய்ய குழுவை அமைத்துள்ளார் ✍️✍️✍️✍️✍️✍️✍️

இதே போல 01.06.2009 க்குப் பின் பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாகவும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக விரைவில் சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை மாநில, மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் நடத்த திட்டமிட்டு வருகிறோம்

✍️✍️✍️✍️✍️✍️✍️

தொடர்ந்து அடுத்து வரக்கூடிய விடுமுறை நாளில் சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு வருகிறோம்

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும்

01.06 2009க்கு பிறகு பணியில் சேர்ந்த சுமார் 14x000 முதுகலை ஆசிரியர்களுக்கு

சம வேலைக்கு சம ஊதியம் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்

✍️✍️✍️✍️✍️✍️✍️

நன்றி வணக்கம்

ஆ.இராமு

மாநிலத் தலைவர்

நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்

DRPGTA

7373761517

சென்னை

01.01.2023

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.