அரசு ஊழியர் சங்கம் ஜாக்டோ ஜியோ ஜன.5 ல் ஆர்பாட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 2, 2023

அரசு ஊழியர் சங்கம் ஜாக்டோ ஜியோ ஜன.5 ல் ஆர்பாட்டம்

'கடந்தாண்டு ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வை வழங்க அரசு முன்வரவேண்டும்'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் கூறினார். அவரது அறிக்கை:

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை 1.7.2022 முதல் வழங்குவதாக அறிவிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின், இது ஆங்கில புத்தாண்டு பரிசு என்று அறிவித்துள்ளார். இது வழக்கமாக வழங்கக் கூடியதுதான். சலுகை அல்ல.

கடந்த 20 மாத ஆட்சிகாலத்தில் 18 மாத அகவிலைப்படி உரியதேதியில் தராமல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.10 ஆயிரத்து 200 கோடி இழந்துள்ளோம். எனவே , 1.7.2022 முதல் மத்திய அரசு ஊழியருக்கு வழங்குவது போல நிலுவை தொகையை வழங்க வேண்டும். எங்கள் மாநாட்டில் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என முதல்வர் அறிவித்ததால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 20 மாதங்களாக அகவிலைப்படி தவிர வேறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

எங்கள் கோரிக்கைகளான புதிய பென்ஷன் திட்டம் ரத்து, சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலருக்கும் காலமுறை ஊதியம், புதிய நியமனத்திற்கு வழியில்லாத அரசாணைகள் 115, 139, 152 ஐ ரத்து செய்தல், காலியிடங்களை நிரப்புதல் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். அரசு நிதிநிலை சீரடைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் புதிய கோரிக்கைகள் எதையும் முன்வைக்கவில்லை. இவற்றை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி ஜன.5 ல் முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஜன.8 ல் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுகூடி அடுத்த செயல்பாடு குறித்து அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. ஏற்கனவே நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படியினால்
    அரசுக்கு பல ஆயிரம் கோடி
    மிச்சம்.இந்த நிலைமை
    நீடித்தால் சம்பளத்தில்
    கை வைப்பார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.