ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் - தலைமைச் செயலாளர் இறையன்புவின் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 19, 2023

ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் - தலைமைச் செயலாளர் இறையன்புவின் உத்தரவு

Republic Day on 26th January - Chief Secretary's Order

| "ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று சாதிய பாகுபாடின்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசிய கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் "

- மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

நேர்முக கடித எண். 15792/பரா-42) 2022-5, நாள் 18.012023

அன்புள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களே,

பொருள்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாட்டின் அனைத்து நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின தலைவர்கள் மீதான சாதிய பாகுபாடுகள்- தொடர் நடவடிக்கையின் மீது - விரிவான அறிக்கைகள் கோருவது தொடர்பாக.

பார்வை: 1 நேர்முகக் கடித எண்.2035/சிறப்பு.ஆ/2022-2,

(பொதுத்துறை) நாள் 12.08.2022 மற்றும் 20.08.2022. 2. அரசு முதன்மைச் செயலாளரின் நேர்முகக் கடித எண்.15792/பரா.4/2022-4, நாள் 22.09.2022 மற்றும் 17.11.2022

பார்வை ஒன்றில் காணும் எனது நேர்முகக் கடிதத்தில், ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற தகவல் கிடைக்கப்பெற்றதும், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு மற்றும் 1989- ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதிய மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) ஆகிய சட்டப் பிரிவுகளை கருத்தில் கொண்டு 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களைக் கொண்டு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்வதை உறுதி செய்யுமாறும், இது குறித்து எடுக்கப்பட்ட அறிக்கையினை அரசுக்கு அனுப்பிவைக்கவும் கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொருள் தொடர்பாக பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குரிய 15 இனங்கள் கண்டறியப்பட்டு அவற்றை களையுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.