2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் “டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குதல் - ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 16, 2023

2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் “டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குதல் - ஆணை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - திரு.எஸ்.வி.ராஜதுரை, அவர்களுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் “டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் திரு.எஸ்.வி.ராஜதுரை, அவர்களுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது” வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் நலத கொடுண்டு துறை

அரசாணை (ப) எண்: 12 - நாள் 14.012023

சுபகிருது மார்கழி 30 ஆம் நாள் திருவள்ளுவராண்டு 2063 படிக்கப்பட்டது;

1. அரசாணை (நிலை) எண்.52, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நாள் 22.31995.

2 அரசாணை (ப) எண்.65, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்கொடுதடுதுறை. நாள் 29.03.202

3 அரசாணை (ப) எண்.234, ஆதிதிராவிடர் மற்றும் நலத்(கொடுதடு)துறை, நாள் 21112022 பழங்குடியினர்

4, ஆதிதிராவிடர் நல இயக்குநரின் கடிதம் ந.க.எண்.ஆ2280212022, நாள் 30:12:2022 மற்றும் 06.01.2023. 15. செய்தி வெளியீடு எண்.103 நாள் 14.012023

ஆணை

ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அம்மக்களின் முன்னேற்றத்திற்கு தொண்டு செய்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு “டாக்டர் அம்பேத்கர் விருது" என்ற பெயரில் விருதும், நற்சான்றிதழும் ரூ.100,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) பரிசுத் தொகை, 8 கிராம் தங்கப் பதக்கமும் மற்றும் தகுதியுரையும் வழங்குவதென முடிவு செய்து மேலே ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை பிறப்பிக்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் ஆண்டுதோறும் அரசால் செயற்படுத்தப்பட்டு வருகிறது. 2 மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் - விருதுத் தொகை ஒரு இலட்சம் என்பதை ஐந்து இலட்சமாக உயர்த்தி, அதன்படி விருதாசாருக்கு ரூ.5,00,000- ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) விருதுந் தொகையும், 8 கிராம் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டது.

மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர்- விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூ.5.00.000- ஸ்ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) காசோலை வழங்குவதற்கும், ஒரு சரன்- மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை போன்ற இதர செலவினங்களுக்கு ரூ.55,000/- ரூபாய் அறுபத்தைந்தாயிரம் மட்டும்) ஆக மொத்தம் ரூ.565,000/- ரூபாய் ஐந்து இலட்சத்து அறுபத்தைந்தாயிரம் மட்டும்) நிதியொப்பளிப்பு செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டது.

2022-ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது” திருஎஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு வழங்க அரசு முடிவெடுத்து அவ்வாறே ஆணையிடுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.