ஆசிரியா் காலிப் பணியிடங்கள்: ஜன.18-க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official

Breaking

Saturday, January 14, 2023

ஆசிரியா் காலிப் பணியிடங்கள்: ஜன.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியா் காலிப் பணியிடங்கள்: ஜன.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களுக்கு வரும் ஜன.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல ஆரம்பப் பள்ளி, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா்-12, பட்டதாரி ஆசிரியா்-4 என மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனை அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது. இதில் இடைநிலை ஆசிரியா் பணிக்கு ரூ.7,500 மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும். வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வாளராக இருப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அல்லது வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பதும் அவசியம்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான நியமனத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதேபோல், இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் காலிப்பணியிடங்களை சம்பந்தப்பட்ட பாடத்துக்கான முழுமையான கல்வித் தகுதி பெற்ற நபா்களை மட்டுமே பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக நிரப்பவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோா் உரிய கல்விச் சான்று நகளுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்துக்கு வரும் ஜன. 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.