15 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு - கல்வித்துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 6, 2023

15 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு - கல்வித்துறை உத்தரவு

15 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு - கல்வித்துறை உத்தரவு

அரசுமேல்நிலை, உயர்நிலை பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் பதவி உயர்வு தற்காலிக அடிப்படையில் அளிக்கப்படுவதாக பள் ளிக்கல்வித்துறை நேற்று இரவு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.



அதன்படி சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் இரா.சி.சரஸ்வதி, நீலகிரிமாவட்ட கல்வி அலுவலராகவும் (இடைநிலை), செங்கல்பட்டு மாவட்டம் காட் டுக்கரணை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முரளி, மதுரை மாவட்ட கல்வி அலுவலராகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். வி.ரமாவதி, திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலராகவும், மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் அ.குருநாதன், தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் உள்பட மொத்தம் 15 தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் முற்றிலும் தற்காலிக மானது எனவும், தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய பணியிட பொறுப்புகளை அப்பள்ளியின் மூத்த முதுகலை, பட்டதாரி ஆசி ரியரிடம் ஒப்படைத்து விட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.