10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எவ்வளவு மாணவர்கள் எழுதுகிறார்கள்? கல்வித்துறை தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 15, 2023

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எவ்வளவு மாணவர்கள் எழுதுகிறார்கள்? கல்வித்துறை தகவல்

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எவ்வளவு மாணவர்கள் எழுதுகிறார்கள்? கல்வித்துறை தகவல்

சென்னை, ஜன.15- 2022-23-ம் கல்வியாண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரையிலும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுமார்ச் மாதம் 14-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையிலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரையிலும் நடை பெற உள்ளது. இதில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்தநிலையில் பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவ-மாணவிகளின் விவரங்கள் நேற்று வெளியாகி உள்ளன.

அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 மாணவ-மாணவிகளும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 87 ஆயிரத்து 783 மாணவ-மாணவிகளும், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 482 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 25 லட்சத்து 77 ஆயிரத்து 332 பேர் எழுத இருப்பதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. இந்த 3 பொதுத்தேர்வுகளிலும் தமிழ் வழியில் 12 லட்சத்து 91 ஆயிரத்து 605 மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள். அவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.