இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் உடல்நலத்தை கருத்தில் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 29, 2022

இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் உடல்நலத்தை கருத்தில் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை

பத்திரிகை ஊடக செய்தி

~~~~

இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் உடல்நலத்தை கருத்தில் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் - சா.அருணன் - கோரிக்கை

~~~~

2009ம் ஆண்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு பெருமளவில் இருக்கிறது அதாவது ஒருநாள் வித்தியாசத்தில் மாதம் ஊதியத்தில் ரூ 10.000/- மேல் குறைவாக இருக்கிறது இதனை சரி செய்ய கடந்த பத்தாண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர் இடைநிலை ஆசிரியர்கள் ஒவ்வொரு போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு அளித்துவருகிறது

சென்ற ஆட்சியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்தவந்த நிலையில் தற்போது அதே கோரிக்கையை முன்வைத்து காலவரையற்ற நீர் உணவு அருந்தாமல் போராடி வருகுன்றனர் 27ம் தேதி முதல் போராடிவரும் நிலையில் அவர்களின் உடல்நிலை மிகவும் பாதிப்பு அடைந்து வருகிறது இது மிகவும் வருத்தத்தையும் வேதனையும் ஏற்படுத்துகிறது ஆதலால் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும்

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் தங்கள் நியாமான கோரிக்கையை ஏற்று நிறவேற்றுவார்கள் தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவேன் என அறிவித்து செயலாற்றி வருகிறார் , தங்கள் கோரிக்கையும் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு உடல்நலத்தை கருத்தில் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு இடைநிலை ஆசிரியர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.