சம வேலைக்கு ,சம ஊதியம் கேட்டு போராடும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வெல்லட்டும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 29, 2022

சம வேலைக்கு ,சம ஊதியம் கேட்டு போராடும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வெல்லட்டும்

சம வேலைக்கு ,சம ஊதியம் கேட்டு போராடும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வெல்லட்டும். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் போராட்ட வாழ்த்து செய்தி
சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள்.ஊதியக்குழு அமைத்ததில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்று கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் மிகப்பெரிய ஊதிய இழப்பை சந்தித்து தங்களது வாழ்வாதாரம் மேம் பட தொடர்ச்சியாக களத்தில் நின்று போராடி வருகிறார்கள்.2018 இல் அவர்கள் நடத்திய போராட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கலந்துகொண்டு அவர்களுடைய கோரிக்கைக்கு முழு ஆதரவு வழங்கினார்.

திமுக ஆட்சி அமைந்ததும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்திருந்தார். இது பாதிக்கப்பட்ட ஆசிரியர் தோழர்களிடையே மிகுந்த மன ஆறுதலையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.