பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 28, 2022

பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்

பணிவரன்முறை / தேர்வுநிலை / சிறப்பு நிலை கருத்துருக்கள் அனுப்பும் பொழுது ஆசிரியர்களின் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட வேண்டியவை - மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்

(Regularisation / Selection Grade / Special Grade - Attachments to be enclosed with applications of Teachers while sending - Proceedings of karur District Education Officer (Elementary Education)

தொடக்கக்கல்வி - கரூர் கல்வி மாவட்டம் - பணிவரன்முறை, தேர்வுநிலை – சிறப்பு நிலைக் கருத்துருக்கள் அனுப்புதல் - சார்பு.

கரூர் மாவட்டத்தில் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை, தேர்வுநிலை / சிறப்புநிலை கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் இணைப்பில் உள்ள சரிபார்ப்பு பட்டியலில் உள்ளவாறு சரிப்பார்க்கப்பட்டு இவ்வலுவலகத்திற்கு அனுப்பப்படவேண்டும். ஆசிரியர்களுக்கு துரிதமாக ஆணைகள் வழங்கும் பொருட்டு எவ்வித காலதாமதமின்றியும் மற்றும் குறைகள் இன்றியும், விண்ணப்ப படிவத்தில் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட பக்கங்கள் குறிக்கப்பட்டு இணைப்புகள் முழு வடிவில் அசல் பணிப்பதிவேடுடன் சரிபார்ப்பு பட்டியலில் உள்ளவாறு வரிசைப்படுத்தி ஒரு கருத்துரு மட்டும் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு

பணிவரன்முறை கோரும் போது இணைக்கப்படவேண்டியவை.

1. ஆசிரியரின் விண்ணப்பம்.

2. பணிவரன்முறை கோரும் படிவம்.

3. நியமன ஆணை நகல்

4. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் உண்மைத்தன்மை சான்று.

5. 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் உண்மைத்தன்மை சான்று.

6. இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்று / இளங்கலை பட்டச்சான்று நகல் மற்றும் உண்மைத்தன்மை சான்று.

7. தொழிற்கல்வி சான்று நகல் மற்றும் உண்மைத்தன்மை சான்று நகல்

8. பதவி உயர்வு பெற்ற பணியிடத்தில் பணிவரன்முறை எனில் கீழ்பதவியில் நியமன ஆணை நகல் / பணிவரன்முறை / தகுதிகாண் பருவம் ஆணை நகல்கள் இணைக்கப்படவேண்டும்.

தேர்வுநிலை / சிறப்புநிலை கோரும்போது இணைக்கப்பட வேண்டியவை.

1. ஆசிரியரின் விண்ணப்பம்.

2.தேர்வுநிலை / சிறப்புநிலை கோரும் படிவம்.

3. பதிவுத்தாள்.

4. பணிக்காலம் சரிபார்ப்பு படிவம்.

5. நியமன ஆணை நகல்

6. பணிவரன்முறை ஆணை நகல்.

7. தகுதிகாண் பருவம் முடித்த ஆணை நகல்.

8. சிறப்புநிலை எனில் தேர்வுநிலை ஆணை நகல் இணைக்கப்படவேண்டும்.

9. பதவி உயர்வு பெற்ற பணியிடத்தில் தேர்வு / சிறப்புநிலை எனில் பதவி உயர்வு ஆணை நகல் / பணிவரன்முறை ஆணை நகல் இணைக்கப்படவேண்டும்.

10. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் உண்மைத்தன்மை சான்று.

11. 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் உண்மைத்தன்மை சான்று.

12. இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்று / இளங்கலை பட்டச்சான்று நகல் மற்றும் உண்மைத்தன்மை சான்று.

13.தொழிற்கல்வி சான்று நகல் மற்றும் உண்மைத்தன்மை சான்று நகல்

14. TET சான்று உண்மைத்தன்மை நகல்

15. பணியில் சேர்ந்த பின்பு உயர்கல்வி பயின்று இருப்பின் துறையின் முன்அனுமதி பெற்ற ஆணை நகல்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.