கடைகளில் காலாண்டு தேர்வு வினாத்தாள் - இயக்குனரின் உத்தரவை மீறிய வட்டார கல்வி அலுவலர் - QUARTERLY EXAMINATION QUESTION PAPER IN SHOPS - District Education Officer in violation of Director's order - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 26, 2022

கடைகளில் காலாண்டு தேர்வு வினாத்தாள் - இயக்குனரின் உத்தரவை மீறிய வட்டார கல்வி அலுவலர் - QUARTERLY EXAMINATION QUESTION PAPER IN SHOPS - District Education Officer in violation of Director's order

கடைகளில் காலாண்டு தேர்வு வினாத்தாள் இயக்குனரின் உத்தரவை மீறிய வட்டார கல்வி அலுவலர் - QUARTERLY EXAMINATION QUESTION PAPER IN SHOPS - District Education Officer in violation of Director's order

கடையில் காலாண்டு வினாத்தாள்கள்...... தேர்வுக்கு முன்பே வெளியானதால் மாணவர்கள் அதிர்ச்சி்..மீண்டும் தேர்வு நடத்தப்படுமா....?

தொடக்கப்பள்ளி மாண வர்களுக்கு இன்று வழங்க வேண்டிய காலாண்டு வினாத்தாள்கள் இயக் குனரின் உத்தரவை மீறி கடையில் ஒப்படைக் கப்பட்டதால் பொதுமக் கள்,ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இன்று வழங்க வேண்டிய காலாண்டு வினாத்தாள்கள் இயக்குனரின் உத்தரவை மீறி கடையில் ஒப்படைக்கப்பட்டதால் பொதுமக்கள்,ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் காலாண்டு,அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் தமிழக முழுவதும் பொதுவான வினாத்தாள் அச்சடிக்கப்பட்டு தேர்வு நடந்தது.இந்த ஆண்டு நேரமின்மை காரணமாக மாவட்ட அளவில் பொதுவான வினாத்தாள் தயாரித்து, அவற்றை முதன்மை கல்வி அலுவலர் வட்டார கல்வி அலுவலர்களிடம் கொடுத்து, வட்டார கல்வி அலுவலர்களிடமிருந்து ஆசிரியர் பயிற்றுனர் பெற்று பின் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையத்தில் கொடுக்கப்பட்டு பள்ளிகளுக்கு பிரித்து வழங்க இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.

இதில் எந்தவித தவறுகளும் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என இயக்குனர் தெரிவித்து இருந்தார்.ஆனால் கொடைக்கானல் வட்டார கல்வி அலுவலர் பழனிராஜ் இயக்குனரின் உத்தரவை பொருட்படுத்தாது, இன்று நடக்கவுள்ள தேர்வுகளின் வினாத்தாள்களை வத்தலக்குண்டில் உள்ள ஒரு அலைபேசி கடையில் கொடுத்து, அவருக்கு தெரிந்த ஒரு ஆசிரியரிடம் அதனை பெற்றுச்செல்லுமாறு அறிவுறுத்தினார்.

வத்தலக்குண்டு கடையில் இருந்து வினாத்தாள்களை பெற்ற ஆசிரியர்,அதில் சில பள்ளிகளுக்கான வினாத்தாள் இல்லாததால் அதனை மீண்டும் அந்த அலைபேசி கடையிலேயே கொடுத்தார். இன்று நடக்க உள்ள தேர்வுக்கான வினாத்தாள் நேற்று கடையில் ஒப்படைத்த விபரம் தெரிந்து பெற்றோர்,ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜே.எஸ்.ஆர்., தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் குன்வர் சோசுவா வளவன் கூறுகையில், கொடைக்கானல் வட்டார கல்வி அலுவலர் செய்த காரியம் இயக்குனரின் உத்தரவை மீறியதாக உள்ளது.

இது சம்பந்தமாக முதன்மை கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டேன்.தொடர்பு கிடைக்காததால் அவருடைய நேர்முக உதவியாளர் கதிரேசனிடம் தகவல் கூறியுள்ளோம்,என்றார்.காலாண்டு தேர்வுகள் நடந்து வரும் நிலையில் கொடைக்கானல் வட்டாரத்தில் உள்ள மேல்மலை,கீழ்மலையில் பெரும்பாலான அரசு தொடக்க பள்ளிகளுக்கு இன்னும் புத்தகங்களே வழங்கவில்லை என்ற தகவலும் அதிர்ச்சியாக உள்ளது.

1 comment:

  1. Ithukku முன்னால teachers question paper prepare panniyo, question paper கிடைக்கும் இடங்களில் வாங்கியோ exam நடந்தது. சும்மா ஆல் பாஸ் ஒரு திட்டம் கொண்டுவந்துட்டு, தேவை இல்லாத buildup ithu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.