Change in School Education Department Newly 32 DEO, Office - பள்ளி கல்வித் துறையில் மாற்றம் புதிதாக 32 டி.இ.ஓ., அலுவலகம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 19, 2022

Change in School Education Department Newly 32 DEO, Office - பள்ளி கல்வித் துறையில் மாற்றம் புதிதாக 32 டி.இ.ஓ., அலுவலகம்

பள்ளிக் கல்வித் துறையில் ஏற்படுத்தப்பட்ட, நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிதாக, 32 மாவட்ட கல்வி அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளி மற்றும் தொடக்க கல்விக்கு, புதிய டி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில், அ.தி.மு.க., ஆட்சியின்போது, சில நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

நடவடிக்கைகள் ரத்து

இதன்படி, தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளி டி.இ.ஓ., பணியிடங்கள் ரத்து செய்யப் பட்டன. 78 ஆக இருந்த கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, 120 மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.தி.மு.க., ஆட்சி வந்த பின், அந்த நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கான அறிவிப்பை, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி, அனைத்து வருவாய் மாவட்டத்திலும்,தொடக்க கல்விக்கு என தனி டி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.உயர்நிலை, மேல்நிலை பிரிவுக்கு ஒரு டி.இ.ஓ., என்றும், தொடக்க கல்வி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தலா ஒரு டி.இ.ஓ., என்றும் நிர்வாக முறை மாற்றப்பட்டுள்ளது.

முன்னுரிமை

இதன்படி புதிதாக, 32 மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, ஏற்கனவே செயல்பட்டு வரும், 120 மாவட்ட கல்வி அலுவலகங்களுடன் கூடுதலாக, 32 அலுவலகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய முறைப்படி, டி.இ.ஓ.,க்களை நியமிப்பதற்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் நரேஷ் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழு, கவுன்சிலிங்கை நடத்தியது. இதில், நேரடி நியமன டி.இ.ஓ.,க்களுக்கு முன்னுரிமை அளித்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் 19ம் தேதி முதல், புதிய அலுவலர்கள் தங்கள் பொறுப்புகளை கவனிக்க உள்ளதாக, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.