CEO TRANSFER AND PROMOTION ORDER - முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 20, 2022

CEO TRANSFER AND PROMOTION ORDER - முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக மாறுதல் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு வழங்கி ஆணை வெளியிடப்பட்டது- சார்ந்து.

பார்வை:

அரசாணை (நிலை) எண் : 157, பள்ளிக் கல்வி (ப.க1(1)) துறை நாள்: 20.09.2022

பார்வையில் காணும் அரசாணையில் முதன்மை கல்வி அலுவலர் நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டும், மாவட்டக் கல்வி அலுவலர் நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு அளித்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேற்காணும் அரசாணை இத்துடன் இணைத்து சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது. மாறுதல் அளிக்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது பணியிட பொறுப்புகளை, மாவட்டத்தில் உள்ள மூத்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு உடன் புதிய பணியிடத்தில் சேருமாறும், பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படும் அலுவலரிடம் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு, உடன் புதிய பணியிடத்தில் பணியில் சேருமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாவட்டக் கல்வி அலுவலர் பொறுப்பு நியமனத்திற்கான பின்னேற்பு ஆணை கோரி, தனியே கருத்துரு அனுப்புமாறும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பணிவிடுவிக்கப்படும் அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரிந்த அலுவலர்கள் சார்பாக மந்தண அறிக்கைகள் எழுத வேண்டியிருப்பின், அதனை முடித்துவிட்டு புதிய பணியிடத்தில் சேருமாறும், பணிவிடுவிப்பு மற்றும் பணியேற்பு அறிக்கையினை உடன் இவ்வியக்ககம் அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.