7வது ஊதியக்கமிஷன்: தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் 3 பெரிய பரிசுகள் - Kalviseithi Official

Breaking

Saturday, September 17, 2022

7வது ஊதியக்கமிஷன்: தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் 3 பெரிய பரிசுகள்

7வது ஊதியக்கமிஷன்: தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் 3 பெரிய பரிசுகள்
7வது ஊதியக்கமிஷன் டிஏ உயர்வு சமீபத்திய செய்திகள்: தீபாவளிக்கு முன் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மிக நல்ல செய்தியை பெற உள்ளனர். இந்த முறை ஊழியர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து ஒன்றல்ல இரண்டல்ல மூன்று பெரிய பரிசுகள் கிடைக்கப் போகின்றன. ஊடக அறிக்கையின்படி, தீபாவளிக்குள், ஊழியர்கள் 3 பெரிய அறிவிப்புகளை பெறக்கூடும். இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சம்பளம் உயரும்:

செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும் என்பது அனைவரும் அறிந்ததே. அதாவது, ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பரிசாக கிடைக்கப் போகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவிகித அகவிலைப்படியை வழங்கி வருகிறது. இம்முறை இது 4 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதால், செப்டம்பர் மாதத்தில் ஊழியர்களுக்கு 38 சதவீதம் டிஏ கிடைக்கும். இந்த உயர்வு காரணமாக, ஊழியர்களின் சம்பளத்தில் அதிகப்படியான ஏற்றம் இருக்கும். ஊழியர்கள் மட்டுமின்றி, ஓய்வூதியம் பெறுபவர்களும் 38 சதவீத விகிதத்தில் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) பெறுவரகள்.

அகவிலைப்படி நிலுவைத் தொகை:

மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படியுடன், டிஏ நிலுவைத் தொகையும் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும். ஜூலை 2022 முதல், மத்திய ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட டிஏ பணம் கிடைக்கும் . இதன் மூலம் ஊழியர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படியும் நிலுவைத் தொகையாக கிடைக்கும்.

கொரோனா தொற்று காரணமாக, மே 2020 இல் முடக்கப்பட்ட அகவிலைப்படி, ஜூலை 2021 முதல் மீட்டெடுக்கப்பட்டது. எனினும், இந்த ஒன்றரை ஆண்டு கால நிலுவைத் தொகை பற்றிய தகவலுக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். அது குறித்து அரசு நேர்மறையான முடிவை எடுத்தால், அந்த தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும்.

பிஎஃப் வட்டி பணம்:

இந்த இரண்டு பரிசுகளைத் தவிர, மத்திய அரசு தீபாவளிக்கு முன்னதாக பிஎஃப் வட்டிப் பணத்தையும் ஊழியர்களின் கணக்கிற்கு மாற்றக்கூடும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) பண்டிகைக காலத்துக்கு முன்பாக வட்டித் தொகையை சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கக்கும். அக்டோபர் இறுதிக்குள் அனைவரது கணக்கிலும் 8.1 சதவீத வட்டி சேர்க்கப்படும். இது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக கிடைக்கும். நடப்பு நிதியாண்டில், 8.1 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.