30.09.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திலும் அதனைத்தொடர்ந்து 02.10.2022 கிராம சபா கூட்டத்திலும் பங்கேற்கும் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பங்கும் பொறுப்பும் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல் முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 26, 2022

30.09.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திலும் அதனைத்தொடர்ந்து 02.10.2022 கிராம சபா கூட்டத்திலும் பங்கேற்கும் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பங்கும் பொறுப்பும் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல் முறைகள்!

30.09.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திலும் அதனைத்தொடர்ந்து 02.10.2022 கிராம சபா கூட்டத்திலும் பங்கேற்கும் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பங்கும் பொறுப்பும் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல் முறைகள்! - 30.09.2022 School Management Committee Meeting and then 02.10.2022 Gram Sabha Meeting to participate in the role and responsibilities of the Director of Integrated Schooling Program depending on the role and responsibility!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-600006

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண்.2223/C7/பமேகு/ஒபக/2022 நாள் 26.09.2022

பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 30.09.2022 அன்று நடைபெறுதல் பள்ளி மேலாண்மைக் குழு முதன்மைக் கருத்தாளர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளுதல் வழிகாட்டுதல்கள் - சார்பு.

பார்வை: இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண். 2223 /C7/ ஒபக பமேகு 2022 நாள். 22.09.2022

பார்வையில் காண் கடிதத்தின்படி, பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 30.09.2022 அன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து 02.10.2022 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களிலும் முதன்மைக் கருத்தாளர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பார்வையாளர்கள் கலந்து கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அவர்களது பங்கும் பொறுப்பும் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கலாகிறது.

பார்வையாளர்கள் பள்ளிகளுக்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பார்வையாளர்களாக கலந்து கொள்ளும் முதன்மைக் கருத்தாளர்களுக்கு அடையாள அட்டை (ID Card) வழங்கப்படும்.

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் தொடர்பாக பின்பற்ற வேண்டிய அனைத்து வழிமுறைகளையும், கூட்ட நிகழ்வையும் பார்வையாளர் முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும்.

2 பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட நாளன்று பிற்பகல் 230 மணியளவில் பார்வையாளர் பள்ளிக்குச் சென்றுவிட வேண்டும்.

3. பள்ளி மேலாண்மைக் குழு குறித்த ஊக்கமூட்டும் காணொலிகள் திரையிடப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

4. பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் முழுவதும் நடந்து முடியும்வரை பார்வையாளர் பள்ளியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

5. தேவைப்படும் பட்சத்தில் கூட்டம் சார்ந்த நிகழ்வில் பார்வையாளர் உறுதுணையாக இருக்க வேண்டும். (வருகைப் பதிவு. திட்டமிடல் போன்ற செயலி செயல்பாடுகளில்) சார்ந்த

6. பார்வையாளருக்கென தரப்பட்டுள்ள படிவத்தை (Google Form) பூர்த்தி செய்தல் வேண்டும். இதனை பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட நாளன்றே மாலை 8.00 மணிக்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.

இணைப்பு:

பள்ளி மேலாண்மைக் குழு முதன்மைக் கருத்தாளர்கள் பெயர்ப்பட்டியல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.