NEET தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண் இருந்தாலும் மருத்துவப் படிப்புகளுக்கு வாய்ப்பு: மத்திய அரசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 1, 2022

NEET தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண் இருந்தாலும் மருத்துவப் படிப்புகளுக்கு வாய்ப்பு: மத்திய அரசு

கட்ஆப் மதிப்பெண் கணக்கில் கொள்ளாமல் இரண்டாவது சிறப்பு கலந்தாய்வு (Special Mop-up Round II)கூட்டத்தை நடத்த கலந்தாய்வு குழு முடிவெடுத்துள்ளது

NEET-SS 2021: நீட் நுழைவுத் தேர்வின் கட்ஆப் மதிப்பெண் இல்லாமல் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான (DM/MCh/DNB (Super Speciality) மாணவர் சேர்க்கை நடத்த சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவெடுத்துளது.

இதன் காரணமாக, நீட் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட அரசு/தனியார் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான வாய்ப்பை பெற உள்ளனர். 2021 கல்வியாண்டுக்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி நடைபெற்றது. இதை அடுத்து, அகில இந்திய மற்றும் மாநில அளவில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கூட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ கலந்தாய்வு குழு (Medical Counselling committe ) மேற்கொண்டது. இதில், பெரும்பாலான இடங்கள் நிரப்பப்பட வில்லை.

நீட் தகுதி மதிப்பெண்ணில் 15 சதவீதம் குறைப்பது என மத்திய சுகாதார அமைச்சகம் முடிவெடுத்தது. இதனடிப்படையில், இரண்டு கூடுதல் கலந்தாய்வு கூட்டங்களும், சிறப்பு கலந்தாய்வு (Mop- up Counselling) கூட்டத்தையும் மேற்கொண்டது. இருப்பினும், 747 இடங்கள் காலியாக விடப்பட்டன.

இந்நிலையில், காலியிடங்களை நிரப்புவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் மேற்கொண்ட ஆலோசனை அடிப்படையில், கட்ஆப் மதிப்பெண் கணக்கில் கொள்ளாமல் இரண்டாவது சிறப்பு கலந்தாய்வு (Special Mop-up Round II)கூட்டத்தை நடத்த கலந்தாய்வு குழு முடிவெடுத்துள்ளது.

இது, ஒருமுறை வழங்கும் வாய்ப்பாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், அகில இந்திய மற்றும் மாநில அளவில் உள்ள இடங்களை எடுக்காத மாணவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 2022 வருட உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதி நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

www.kalviseithiofficial.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும். பெற்றோர் மற்றும் மாணவர்கள் அவ்வப்போது இந்த தளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மருத்துவ சேர்க்கையில் தகுதியான மாணவர்கள் சேர்வை உறுதி செய்வதற்காக நீட் தேர்வு கொண்டு வரப் பட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் முதுகலை, சிறப்பு மருத்துவம் போன்ற உயர் படிப்புகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.