பள்ளி கல்வி அமைச்சர் படித்த படிப்பு என்ன? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 14, 2022

பள்ளி கல்வி அமைச்சர் படித்த படிப்பு என்ன?

பள்ளி கல்வி அமைச்சர் படித்த படிப்பு என்ன?


சென்னை:பள்ளிக் கல்வி துறை அமைச்சரின் கல்வி தகுதி குறித்து, திடீர் சர்ச்சை எழுந்துள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ். இவர் அமைச்சரானதும், பள்ளிக் கல்வி துறையில் ஆரோக்கியமான மாற்றங்களை செய்வார் என, எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், ஒவ்வொரு நாளும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பதும், புதிய கல்வி கொள்கையின் அம்சங்களை, வேறு பெயர்களில் செயல்படுத்துவதுமாக இருக்கிறார்.

மேலும், பள்ளிகளில் பாலியல் தொல்லை பிரச்னை, மாணவ - மாணவியர் தற்கொலை, ஆசிரியர்களின் போராட்டம் என, பிரச்னைகள் தொடர்கின்றன.இந்நிலையில், கடந்த வாரம் தஞ்சை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த மக்களை நேரில் பார்க்க, அமைச்சர் மகேஷ் சென்றார். அப்போது, எதிரே வந்த ஆம்புலன்ஸ், அமைச்சரின் வாகனம் செல்வதற்காக நிறுத்தப்பட்டதாக, வீடியோ வெளியாகி சர்ச்சை எழுந்தது.

இதற்கு, பாலம் குறுகலாக இருந்ததால், ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள், அமைச்சர் மகேஷின் கல்வித் தகுதி குறித்து, புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. சென்னை, கெல்லிஸ் பகுதியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளி ஆண்டு விழாவில் அமைச்சர் மகேஷ் பங்கேற்க உள்ளதாக, அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், அமைச்சர் மகேஷ், இரண்டு எம்.ஏ., முதுநிலை படிப்புகள், பி.எட்., மற்றும் பிஎச்.டி., ஆகியவை படித்துள்ளதாக அச்சிடப்பட்டுள்ளது.ஆனால், மகேஷ் எம்.சி.ஏ., மட்டுமேபடித்ததாக, அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டு வந்து உள்ளது. எனவே, அமைச்சர் மகேஷ் படித்தது கணினி அறிவியல் தொடர்பான எம்.சி.ஏ., படிப்பா அல்லது முதுநிலை பட்டத்துடன் கூடிய ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி படிப்பான எம்.ஏ., - பி.எட்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளா என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.