எழுத்துத் தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்டு ஆய்வக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டவர்களின் பதவி உயர்வு கோரிக்கையை நிராகரித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 12, 2022

எழுத்துத் தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்டு ஆய்வக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டவர்களின் பதவி உயர்வு கோரிக்கையை நிராகரித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டம், பூங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணிபுரிந்து வரும் திரு சு.வேதபுரி என்பார், தான் பணியில் சேர்ந்து 5 வருடங்கள் கடந்த நிலையில், தமிழ்நாடு பொதுசார்நிலைப் பணியிடத்திலேயே தகுந்த அடுத்த பதவி உயர்வு அளிக்க வழிவகை செய்யுமாறும், ஆய்வக உதவியாளர் பணியிடத்தை புதிய பணியிடம் எனக்குறிப்பிட்டு விதிகள் உருவாக்கவும் கோரியுள்ளார். இதே பொருள் தொடர்பாக பல ஆய்வக உதவியாளர்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொதுசார்நிலைப்பணியின் கீழ் வகுப்பு: LXXII- பள்ளிக்கல்வித் துறைக்கான வ.எ.9-ல் ஆய்வக உடனாள் என்ற பணியிடம் மேல்நிலைப் பள்ளிகளுக்கு உருவாக்கப்பட்டு பின்னர், அரசாணை (நிலை) எண்.538, கல்வி, அறிவியல் மற்றும் தொழிற்கல்வித்துறை. நாள் 29.06.1994-ன்படி இப்பணியிடங்கள் ஆய்வக உதவியாளர் என்று பதவிப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்விதியிலேயே ஏற்கனவே ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்குரிய விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆய்வக உதவியாளர் பணியிடம் ஏற்கனவே உருவாக்கப்பட்டமையால் இது புதிய பணியிடம் என்பதும், விதிகள் வகுக்க வேண்டும் என்ற நிலை எழவில்லை என்பதும் மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இப்பணியிடத்தின் நேரடி நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி பத்தாம் வகுப்பாகும். இப்பணியிடத்திலிருந்து தமிழ்நாடு பொதுசார்நிலைப்பணி விதி வகுப்பு LXXII-யிலேயே பதவி உயர்வு வழங்குவதற்கு வழிவகை ஏதும் இல்லை என்பதால் கோரிக்கையை நிராகரித்து ஆணை வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.