தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்: உயர் நீதிமன்ற உத்தரவால் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் டெட் தேர்ச்சியாளர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 5, 2022

தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்: உயர் நீதிமன்ற உத்தரவால் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் டெட் தேர்ச்சியாளர்கள்



Trichy TET Exam Passed Students suffering | தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு கூட விண்ணப்பிக்க முடியாத சூழல் திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 'டெட்' தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு, நேற்று முதல் இணையம் வழியாகவோ அல்லது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலோ அல்லது மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம்' என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதையடுத்து நேற்று முதல் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் திருச்சி, லால்குடி, முசிறி உள்ளிட்ட மாவட்டக் கல்வி அலுவலங்களில் வேலைக்கு விண்ணப்பிக்க ஏராளமான ஆசிரியர்கள் குவிந்தனர். ஆனால், அங்குள்ள அலுவலர்கள் அவர்களது விண்ணப்பங்களை ஏற்கவில்லை. மாறாக, 'தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருப்பதால், திருச்சி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் சார்ந்த எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை' என்ற அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை மட்டும் சுட்டிக்காட்டினர்.

இதனால் குழப்பம் அடைந்த ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்களிடம் விசாரித்த போது, 'மதுரை கிளை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வரும் திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.