திருநள்ளாறு அருகே அரசுப் பள்ளி வகுப்பறைக்கூடத்தில் காரை பெயர்ந்து விழுந்து விபத்து - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 19, 2022

திருநள்ளாறு அருகே அரசுப் பள்ளி வகுப்பறைக்கூடத்தில் காரை பெயர்ந்து விழுந்து விபத்து

காரைக்கால்: திருநள்ளாறு அருகே அரசுப் பள்ளி ஒன்றின் வகுப்பறை மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. வகுப்பறையில் மாணவர்கள் இல்லாததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே தேனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. திருநள்ளாறு மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர்.



இப்பள்ளியில் தட்டச்சுப் பாடப்பிரிவுக்கான வகுப்பறைகள் உள்ளன. இந்தக் கூடம் 6 மாதங்களுக்கு முன்பு புனரமைக்கப்பட்டதாகும். மின் இணைப்பு வழங்கவில்லை போன்ற புகார்கள் பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.



இதையும் படிக்க | மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு 26.07.2022 நடைபெறும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை புனரமைப்பு செய்யப்பட்ட தட்டச்சுப் பிரிவு வகுப்பறையின் மேற்கூரையிலிருந்து காரைகள் பெயர்ந்து தட்டச்சு இயந்திரங்கள் மீது விழுந்தன. அந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாரும் இல்லாதால் பாதிப்பு பெரியளவில் தவிர்க்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர், கல்வித்துறை அதிகாரிகளுடன் சென்று வகுப்பறையை பார்வையிட்டார். பிற இடங்களில் இதுபோன்ற குறைபாடுகள் இருக்கிறதா எனக் கண்டறிந்து, அதனை சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில், 'காரைக்காலில் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவலால் பள்ளிகள் முறையாக நடைபெறவில்லை. கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதா என கண்டறிந்து சீர்செய்யவும் அரசுத்துறை முன்வரவில்லை. இந்த கட்டடங்கள் ஆய்வு செய்யப்படாமலேயே பள்ளிகள் இயங்கத் தொடங்கியது.

அண்மையில் புனரமைப்பு செய்த கட்டடத்தின் நிலையே இப்படி என்றால், புனரமைப்பு செய்யப்படாத கட்டடத்தின் நிலை கேள்விக்குறிதான். இந்தக் கட்டடத்தில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக உரிய விசாரணை செய்து, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அரசு பள்ளிகளின் கட்டடங்களை பொறியாளர்கள் கொண்ட சிறப்புக் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.