மாணவர்களுக்கு குட் நியூஸ்.. இளமறிவியல் சேர்க்கை.. ஜூலை 27 வரை விண்ணப்பிக்கலாம்.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 2, 2022

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. இளமறிவியல் சேர்க்கை.. ஜூலை 27 வரை விண்ணப்பிக்கலாம்..

2022 - 2023-ம் கல்வியாண்டில் இளமறிவியல் பாடப்பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஜூலை 27-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 18 உறுப்பு கல்லூரிகளில் 2,148 இடங்களும், 28 இணைப்பு கல்லூரிகளில் 2,337 இடங்களும் உள்ளன. 12 இளமறிவியல் பாடப்பிரிவுகளில் சேர https://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு செய்தல், விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசைப் பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடப்பிரிவு போன்ற அனைத்தும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும்.

12 இளமறிவியல் பாடப்பிரிவுகளில் 971 இடங்கள் இட ஒதுக்கீடு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே விண்ணப்பத்தில் விருப்ப பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய முடியும். ஒரே நபர் ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.

மாணவர் சேர்க்கை தொடர்பான இதர விவரங்களுக்கு https://tnau.ac.in/ என்ற தளத்தில் உள்ள தகவல் கையேட்டை பார்த்துக்கொள்ளலாம்.

இது தவிர, பிரத்யேக எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழ் வழியில் வேளாண்மை, தோட்டக்கலை பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. தற்போது 982 ஆசிரியர்கள் பணியில் இருக்கின்றனர். விரிவாக்கக் கல்வி இயக்கம், ஆராய்ச்சி மையம் எனப் பல இடங்களில் ஆசிரியர்கள் பணியில் இருக்கின்றனர்.

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மாணவர் விகிதம் வேறுபாடு இருப்பது உண்மைதான் கடந்த 8 ஆண்டுகளாக புதிய நியமனங்கள் எதுவும் நடைபெறவில்லை.

இதைத் தற்போதைய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் வேளாண்மைப் பாடத்திட்டங்களுக்கான அட்மிஷன் பணிகள் தொடங்கும்.

செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும்” என, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.