2024-ம் ஆண்டு வரை அரசு கல்லூரிகளின் தற்காலிக ஆசிரியர், ஊழியர் 4,681 பேரின் பணி நீட்டிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 28, 2022

2024-ம் ஆண்டு வரை அரசு கல்லூரிகளின் தற்காலிக ஆசிரியர், ஊழியர் 4,681 பேரின் பணி நீட்டிப்பு

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் 4,681 தற்காலிக ஆசிரியர்கள், அலுவல் பணியாளர்களுக்கு 2024-ம் ஆண்டு வரை தொடர்நீட்டிப்பு வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,775 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன. இவர்களுக்கான பணிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிந்துவிட்டது. அதன் பின்னர் சம்பள நீட்டிப்பாணை மூலம் தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, இந்த 4,775 தற்காலிக பணியிடங்களில் 94 இடங்கள் மறைவு பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதையடுத்து, 4,681 ஆசிரியர், ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு மட்டும் 2026 டிசம்பர் 31-ம் தேதிவரை தொடர் நீட்டிப்பு வழங்கக் கோரி அரசுக்கு கல்லூரிக் கல்விஇயக்குநர் கருத்துரு வழங்கினார்.

அதை பரிசீலனை செய்து, 4,681 பணியாளர்களுக்கு 2024 டிச.31 வரை அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு குறித்து நிதித் துறை முடிவெடுக்கும் வரை அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.

சம்பளம் மற்றும் பிற படிகள் வழங்க தேவையான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.