ஆசிரியை உயிரை காப்பாற்றிய ஏட்டுக்கு மத்திய அரசு பதக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 1, 2022

ஆசிரியை உயிரை காப்பாற்றிய ஏட்டுக்கு மத்திய அரசு பதக்கம்

Ballari: The railway magazine that saved the life of a teacher has received the 'Jeevan Raksha' medal from the Central Government.

Rabbi, 40, of Shivamogga, is currently serving as a clerk in the Ballari Railway Police. He was on duty at the railway station on December 21, 2019. Rashmi, 35, was trying to board a moving train when she stumbled and fell.

He was about to fall off the rails when the paper ran and grabbed him and saved his life. Union Railway Minister Aswini Vaishnav received the award at a function in Delhi. It is noteworthy that he is the only recipient of this year's medal from Karnataka.
ஆசிரியை உயிரை காப்பாற்றிய ஏட்டு

ஆசிரியையின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஏட்டுக்கு மத்திய அரசின் 'ஜீவன் ரக்சா' பதக்கம் கிடைத்துள்ளது.

ஷிவமொகாவை சேர்ந்தவர் ரபி, 40. இவர், தற்போது பல்லாரி ரயில்வே போலீசில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் 2019 டிசம்பர் 21ல் ரயில் நிலையத்தில் பணியில் இருந்தார்.

அப்போது ரஷ்மி, 35 என்ற ஆசிரியை ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது, தடுமாறி கீழே விழுந்தார். தண்டவாளத்தில் விழவிருந்த இவரை, ஏட்டு ஓடி சென்று பிடித்து இழுத்து அவரது உயிரை காப்பாற்றினார்.

மத்திய அரசு பதக்கம்

வீரச்செயல் புரிந்த ஏட்டுக்கு, இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் 'ஜீவன் ரக்சா' பதக்கம் கிடைத்துள்ளது. டில்லியில் நடந்த விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கையால் பெற்று கொண்டார். கர்நாடகாவில் இருந்து இந்த ஆண்டுக்கான பதக்கத்தை பெற்றவர் இவர் ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.