பள்ளி வாகனங்கள் 24ல் ஆய்வு: ஆர்டிஓ தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 21, 2022

பள்ளி வாகனங்கள் 24ல் ஆய்வு: ஆர்டிஓ தகவல்

தாம்பரம் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் பள்ளிகள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்துத்துறை, காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கூட்டாய்வு செய்து இயக்குவதற்கு தகுதியான வாகனங்கள் என சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்தவகையில், இந்தாண்டு பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் பொருட்டு தாம்பரம் வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் வரும் 24ம் தேதி காலை 8 மணி முதல் ஆய்வு செய்யப்பட உள்ளன. வண்டலூர் பூங்கா அருகில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர், தாம்பரம் வட்டாரப்போக்குவரத்து அலுவலர், காவல்துறை உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் முன்னிலையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. எனவே, அனைத்து பள்ளி வாகனங்களையும் நடப்பில் உள்ள ஆர்சி புத்தகம், வாகன காப்பீடு, பெர்மீட், மாசு கட்டுப்பாட்டு ஆவணங்களுடன் நேரில் ஆய்வுக்கு எடுத்து வரவேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.