புதிய கல்வி ஆண்டு தொடக்கத்தில் (2022-2023) EMIS இணையதளத்தில் பள்ளி அளவிலான பதிவுகளை சரிசெய்தல் - முகாம் அமைத்தல் - தொடர்பாக கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 25, 2022

புதிய கல்வி ஆண்டு தொடக்கத்தில் (2022-2023) EMIS இணையதளத்தில் பள்ளி அளவிலான பதிவுகளை சரிசெய்தல் - முகாம் அமைத்தல் - தொடர்பாக கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.



திருச்சிராப்பள்ளி மாவட்ட அனைத்து வகைப் பள்ளித்தலைமையாசிரியர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது. 2020-2021 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களில் பள்ளி இறுதி வகுப்பில் (Terminal Class) உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் தயார் செய்து (TC Generate) பொதுதளத்திற்கு(Common Pool) அனுப்பவேண்டும். அவ்வாறு செய்த பிறகே மற்ற வகுப்பில் உள்ள மாணவர்களை ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு நகர்த்த வேண்டும்(Promote). இப்பணியினை சரியாகவும் விரைந்தும் முடிக்க ஏதுவாக அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள்) 27.06.2022 மற்றும் 28.06.2022 ஆகிய இரு தினங்கள் அப்பள்ளிகள் சார்ந்த ஒன்றிய அளவில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் 27.06.2022 அன்று அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 28.06.2022 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், உரிய தகவல்களுடன் கலந்து கொண்டு தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு நகர்த்துதல்(Student Promotion) மற்றும் பிரிவு வாரியான வகுப்பாசிரியர்களை (Class Teacher Assign) ஒதுக்கீடு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இப்பணியினை தொய்வின்றி மேற்கொள்ள ஏதுவாக அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் முகாம் நடைபெறும் ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு ஆசிரியர் பயிற்றுநர்/ஆசிரியரை ஒதுக்கீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.இணைப்பில் குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முகாமை சிறப்பாக நடத்திட அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முகாம் நடைபெறும் மையங்களில் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அப்பள்ளியில் உள்ள Hi-Tech Lab- ஐ தயார்நிலையில் வைக்கவும், முகாம் நடத்தத் தேவையான முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.