பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 18, 2022

பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டி

பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டியை டிஐஜி சத்யபிரியா வழங்கினார். காஞ்சிபுரம் பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் தியாகி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், மரக்கன்றுகள் வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அறக்கட்டளை நிறுவனத் தலைவர் எஸ்.கே.பி.கோபிநாத் தலைமை வகித்தார். அறங்காவலர் ஜெயவிக்னேஷ், சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கடேசன், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி தாளாளர் எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறங்காவலர் தி.பச்சையப்பன் பிரபு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா கலந்து கொண்டு, தியாகி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்கு தொலைக்காட்சி பெட்டி, கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது. வசதியானவர்களில் சிலருக்கு பணம் இருக்கலாம். ஆனால் படிப்பு வராது. அதே நேரத்தில் வசதி இல்லாத பலருக்கு படிப்பு வரும். எனவே கல்வியறிவு என்பது அழியாத செல்வம்.

இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, சரண்சிங் ஆகியோர் தடைக்கற்களை படிக்கற்களாக நினைத்து, படித்து பிரதமராக வந்தவர்கள். தெரு விளக்கில் படித்து நாட்டின் உயரிய பதவியான ஜனாதிபதி பதவியை அலங்கரித்தவர் அப்துல்கலாம். குழந்தைகளிடம் என்ன குறை இருக்கிறது என்பதை பெற்றோர்கள் கண்டறிந்து, அந்த களையவேண்டும்.

வாழ்க்கையின் உயர்வுக்கு மதிப்பெண் மட்டும் போதாது. உரிய பண்புகளும் உங்களை உயர்த்தும் என்றார். நிகழ்ச்சியில் திரைப்பட பாடலாசிரியர் சினேகன், அறங்காவலர்கள் அரவிந்தராஜ், சந்தோஷ், மோனிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.