விடைத்தாள் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 31, 2022

விடைத்தாள் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு

விடைத்தாள் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு

The State Examinations Department has ordered that the headmasters be exempted from editing the answer sheet. The general examinations for 10th class, plus 1 and plus 2 students studying in the school curriculum in Tamil Nadu ended yesterday. Following this, the revision of the answer sheet for the general examination is scheduled to begin today.

First, plus 2 farewells; Then, 10th grade answer sheets; Following that, the Plus 1 answer sheets are also to be edited. School principals were appointed as mark verification officers in the task of editing the answer sheet. However, as the schools are scheduled to reopen on the 13th, the headmasters have to make the necessary preparations. Therefore, the demand arose to send them to school work.

Following this, the State Examinations Department has directed the Principal Education Officers to exempt the head teachers appointed from the post of Score Verification Officer from that post and send them to school work. In addition, it is advisable to appoint senior masters based on the respective subject for mark verification.
விடைத்தாள் திருத்தம்:

விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்றுடன் பொதுத் தேர்வுகள் முடிந்தன. இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், இன்று துவங்க உள்ளது.

முதற்கட்டமாக, பிளஸ் 2 விடைத்தாள்கள்; பின், 10ம் வகுப்பு விடைத்தாள்கள்; அதைத் தொடர்ந்து, பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிகளில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், வரும், 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அவர்களை பள்ளி பணிக்கு அனுப்ப கோரிக்கை எழுந்தது.

தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு

இதையடுத்து, மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர் பணியில் நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு, அந்த பணியில் இருந்து விலக்கு அளித்து, பள்ளி பணிக்கு அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மதிப்பெண் சரிபார்ப்புக்கு அந்தந்த பாடம் சார்ந்த, மூத்த முதுநிலை ஆசிரியர்களை பணியில் நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.