NMMS RESULT 2025 - NMMS தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 11, 2025

NMMS RESULT 2025 - NMMS தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.



NMMS RESULT 2025 - NMMS தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.

NMMS RESULT 2025 - NMMS தேர்வு முடிவுகள் 12.04.2025 அன்று வெளியாக உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை பெறுவதற்கான தேர்வு ( NMMS EXAMINATION - FEB 2025 ) 22.02.2025 அன்று நடைபெற்றது . இத்தேர்வெழுத 2,30,345 மாணாக்கர்கள் விண்ணப்பித்தனர் . இத்தேர்வின் முடிவுகள் 12.04.2025 அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. எனவே , தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Result என்ற தலைப்பில் சென்று தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை பெறுவதற்கான தேர்வு ( NMMS EXAMINATION ) முடிவுகள் பிப்ரவரி 2025 என்ற பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் . மேலும் இத்தேர்விற்கான ஊக்கத் தொகை பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலும் இவ்விணையதளத்திலே National Means Cum Merit Scholarship Scheme Examination என்ற பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.