பாலிடெக்னிக் இல்லாத தொகுதிகளில் கல்லூரி - 10 கல்லூரிகளில் Ph.D படிப்பு - அமைச்சர் உறுதி!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 18, 2022

பாலிடெக்னிக் இல்லாத தொகுதிகளில் கல்லூரி - 10 கல்லூரிகளில் Ph.D படிப்பு - அமைச்சர் உறுதி!!

தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, 'சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்கள் தொகுதியில் கல்லூரிகள் கேட்கிறார்கள்.பாலிடெக்னிக் இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும். பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே 'நான் முதல்வன் ' திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வியும், சுகாதாரமும் என் இரு கண்கள் என்று கூறியுள்ளார் முதலமைச்சர்.கடந்த பட்ஜெட்டிலும், இந்த பட்ஜெட்டிலும் பல புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 31 புதிய அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 55 அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடப்பிரிவு கொண்டு வரப்படும். பாலிடெக்னிக் கல்லூரிகள் மூலம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற தொழிற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 10 கல்லூரிகளில் பி.எச்.டி படிப்பு கொண்டு வரப்படும்,'என்றார். தொடர்ந்து, ஊட்டி தொகுதி, குந்தா வட்டம் மஞ்சூரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ கணேஷ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி,'வரும் காலத்தில் தேவை ஏற்பட்டால் ஊட்டி மஞ்சூரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்,'என்றார்.
பாலிடெக்னிக் கல்லூரி

தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, 'சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்கள் தொகுதியில் கல்லூரிகள் கேட்கிறார்கள்.

பாலிடெக்னிக் இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும். பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே 'நான் முதல்வன் ' திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கல்வியும், சுகாதாரமும் என் இரு கண்கள் என்று கூறியுள்ளார் முதலமைச்சர்.

கடந்த பட்ஜெட்டிலும், இந்த பட்ஜெட்டிலும் பல புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 31 புதிய அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 10 கல்லூரிகளில் பி.எச்.டி படிப்பு

தமிழ்நாட்டில் 55 அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடப்பிரிவு கொண்டு வரப்படும்.

பாலிடெக்னிக் கல்லூரிகள் மூலம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற தொழிற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 10 கல்லூரிகளில் பி.எச்.டி படிப்பு கொண்டு வரப்படும்,'என்றார்.

தொடர்ந்து, ஊட்டி தொகுதி, குந்தா வட்டம் மஞ்சூரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ கணேஷ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி,'வரும் காலத்தில் தேவை ஏற்பட்டால் ஊட்டி மஞ்சூரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்,'என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.