பொது தேர்வுக்கான 'ஹால் டிக்கெட்' தயார் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 22, 2022

பொது தேர்வுக்கான 'ஹால் டிக்கெட்' தயார்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்து பள்ளிகளுக்கும், அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, தேர்வு துறை இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றப் பட்டுள்ளது. பள்ளிகள், www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், பயன்பாட்டு அடையாள எண் மற்றும் ரகசிய வார்த்தையை பயன்படுத்தி, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

பத்தாம் வகுப்பு பெயர் பட்டியலில், மாணவ - மாணவியரின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகியவற்றில் திருத்தங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி, தேர்வு மைய பெயர் பட்டியலில் உரிய திருத்தம் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.