தமிழகத்தில் பள்ளி மாணவியருக்கு ஆஸ்திரேலியா பல்கலை சார்பில் தொடர் திறன் மேம்பாட்டு பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 15, 2022

தமிழகத்தில் பள்ளி மாணவியருக்கு ஆஸ்திரேலியா பல்கலை சார்பில் தொடர் திறன் மேம்பாட்டு பயிற்சி

மாணவியருக்கு ஆஸ்திரேலியா பல்கலை சார்பில் பயிற்சி

ஆஸ்திரேலியா மெல்போர்ன் பல்கலை சார்பில் தமிழகத்தில் பள்ளி மாணவியருக்கு தொடர் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக&' துணைவேந்தர் மைக்கேல் வெஸ்லி தெரிவித்தார்.

இப்பல்கலையின் உலகளாவிய கல்விக் குழு சார்பில் தொழில் சார்ந்த பயிற்சிக்கு அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். உலகளாவிய கல்வி தீர்வு குழு நிர்வாக அதிகாரி ராக்குல் ஷ்ராப் தலைமையில் 3 மாதங்கள் ஆன்லைன் மூலம் இப்பயிற்சி அளித்தனர். சிறந்த மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மதுரை திருநகர் சீதாலட்சுமி பள்ளியில் நடந்தது.

தாளாளர் பூர்ணிமா தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். துணைவேந்தர் மைக்கேல் வெஸ்லி பேசியதாவது:

தனித்திறமை, திறன் மேம்பாட்டு வளர்ச்சி, நிர்வாக திறமை, ஆளுமை, வழிகாட்டுதல், எதிர்கால திட்டமிடல், இலக்கு ஆகியவற்றில் மாணவிகள் சிறப்பாக பயிற்சி பெற்றுள்ளனர். இதுபோன்ற பயிற்சிகளை பல்கலை சார்பில் வழங்க உள்ளோம். படிக்கும்போதே மாணவியர் எதிர்கால இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும், என்றார்.

உதவி துணைவேந்தர் முத்துப்பாண்டியன் அசோக்குமார், அறிவியல் துறை கல்வி தலைவர் மொய்ரா பிராயான் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 26 மாணவிகள் சான்றிதழ் பெற்றனர். ஒத்தக்கடை அரசு பள்ளி தலைமை ஆசிரியை சசித்ரா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.