கலைஞர் எழுதுகோல் விருதுக்கு 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 5, 2022

கலைஞர் எழுதுகோல் விருதுக்கு 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

The Government of Tamil Nadu has announced that you can apply for the 2021 Artist Writing Award by the 30th. Statement issued by the Government of Tamil Nadu: An order has been issued to award the 'Artist Writing Award' to an outstanding journalist on the 3rd of June, the birthday of the artist. Accordingly, applications for the award for the year 2021 are welcome. The award carries a cash prize of Rs 5 lakh and a certificate of appreciation.

Eligibility for the Artist Writing Award is as follows: Applicant must be from Tamil Nadu and have been working in the field of Tamil Journalism for at least ten years.

Must have a full-time job in journalism. The field of journalism should have contributed to the social advancement, advancement of marginalized people and advancement of women. The applicant’s writings should have made a good impression on the public. Applicants may submit applications either directly, on the recommendation of another, or on the recommendation of the employer. The decision of the selection committee set up by the government is final. Applications with the above qualifications, along with his / her details and relevant documents should be sent to the Director, Department of Public Relations, Headquarters, Chennai 600 009 by 30th. Thus stated in the report.

2021ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் நாளன்று ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கவுரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில், 2021ம் ஆண்டுக்கான விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டு சான்றிதழும் அடங்கும். கலைஞர் எழுதுகோல் விருதிற்கான தகுதிகள் பின்வருமாறு: விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகிறவராகவும் இருக்க வேண்டும்.

பத்திரிகை பணியை முழுநேரப் பணியாக கொண்டிருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின்பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம். இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. மேற்காணும் தகுதிகளை கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குனர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு 30ம் தேதிக்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.