ஆசிரியர் தகுதி தேர்வு; அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 18, 2022

ஆசிரியர் தகுதி தேர்வு; அவகாசம் நீட்டிப்பு

The deadline to apply for the Teacher Qualification Examination has been extended to the 26th.

In Teacher Training course, B.Ed., graduates are required to pass the Teacher Qualification Examination to work as teachers from Class I to Class X. In this context, the Teachers' Selection Board on March 7 issued the notice of selection for the newly B.Ed., graduates and those who have not yet passed the qualifying examination.

The 'online' application registration starts on March 14 and ends on April 13. Of this, up to 4.50 lakh people had applied. The last time many people tried to apply, the 'server' crashed. So, many people were disappointed. They, therefore, demanded that they be given ample opportunity to apply; But, not extended.

Curriculum details for the examination only are published on the Board's website, www.trb.tn.nic.in. In this case, after four days, the opportunity to apply for the exam has been extended and online application registration has started from yesterday. Lata, the chairperson of the Teachers' Selection Board, has announced that applications can be submitted till the 26th.

ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும், 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர் பயிற்சி படிப்பில், பி.எட்., பட்டம் முடித்தவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், புதிதாக பி.எட்., முடித்தவர்கள் மற்றும் இதுவரை தேர்ச்சி பெறாதவர்கள், தகுதி தேர்வு எழுதும் வகையில், தேர்வு அறிவிப்பை, மார்ச, 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அவகாசம் நீட்டிப்பு

இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மார்ச் 14ல் துவங்கி, ஏப்., 13ல் முடிந்தது. இதில், 4.50 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். கடைசி நேரத்தில் ஏராளமானோர் விண்ணபிக்க முயற்சித்ததால், 'சர்வர்' முடங்கியது.அதனால், ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, விண்ணப்பிக்க போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்; ஆனால், நீட்டிக்கப்படவில்லை.

தேர்வுக்கான பாடத்திட்ட விபரங்கள் மட்டும், வாரியத்தின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், நான்கு நாட்களுக்கு பின், தேர்வுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் நீட்டிக்கப்பட்டு, நேற்று முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. வரும், 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.