பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டுபிடிப்பு - மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 21, 2022

பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டுபிடிப்பு - மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை

தூத்துக்குடி அருகே பள்ளி செல்லாத 7 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி அருகே பள்ளி செல்லாத 7 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி ஆகியோரின் அறிவுரையின் பேரில், தூத்துக்குடி ஊரக வட்டத்துக்கு உட்பட்ட சுனாமி காலனி, சூசைநகர் பகுதியில் உள்ள பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டறியும் பணி நேற்று நடந்தது. அதன்படி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் தலைமையில், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, மாவட்ட புள்ளியியல் அலுவலர் சுடலைமணி, தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் சூரியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ், சைல்டு லைன் அலுவலர் கவிதா பேபி, போலீஸ்காரர் தனேஷ், வட்டார மேற்பார்வையாளர் சார்லஸ், வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்துசெல்வி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். 7 பேர்

அவர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் நீண்ட காலமாக பள்ளிக்கு செல்லாத 7 மாணவர்கள் கண்டறியப்பட்டனர். தொடர்ந்து அந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. தொடர்ந்து 7 மாணவர்களையும் பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.