இரண்டு கட்ட பொது தேர்வுகள் கைவிட CBSE முடிவு? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 16, 2022

இரண்டு கட்ட பொது தேர்வுகள் கைவிட CBSE முடிவு?

It has been reported that it has been decided to conduct the 10th and Plus 2 general examinations of CBSE in two phases and as a single examination as per the previous practice.

Various Confusion The 10th and Plus 2 general examinations of the Central Board of Secondary Education (CBSE) were held annually in March-April. Following the corona spread in 2020, it became impossible to hold general elections.

Thus, marks were given to the students on the basis of the marks obtained in the previous examinations. This led to various confusions. Subsequently, the CBSE decided to hold the 10th and Plus 2 general examinations in two phases a year.

The first phase of the general elections for the 2021 - 22nd academic year was held in the months of November and December last year and was completed. The second phase of the exam is set to begin later this month. In this context, it is learned that the CBSE has decided to abandon the two-phase general examination system and return to the one-year general examination system as before.

The practice is expected to take effect from the 2022-23 academic year. சி.பி.எஸ்.இ.,யின் 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை இரண்டு கட்டங்களாக நடத்தாமல், முன்பு இருந்த நடைமுறைப்படி ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு குழப்பம்சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு வந்தன. கடந்த 2020ல் கொரோனா பரவல் ஏற்பட்டதை அடுத்து, பொதுத் தேர்வுகளை நடத்த முடியாத நிலை உருவானது.

இதனால், முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. இது, பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுத்தது.இதையடுத்து, 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு கட்டங்களாக நடத்த சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது. 2021 - 22ம் கல்வி ஆண்டுக்கான முதல் கட்ட பொதுத் தேர்வுகள் கடந்தாண்டு நவ., - டிச., மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட தேர்வு இம்மாதம் இறுதியில் துவங்க உள்ளது. அவசியம் இருக்காதுஇந்நிலையில், இரண்டு கட்ட பொதுத் தேர்வு நடைமுறையை கைவிட்டு, முன்பு இருந்தபடி ஆண்டுக்கு ஒரே பொதுத் தேர்வு என்ற நடைமுறைக்கு மீண்டும் திரும்ப சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நடைமுறை, 2022 - 23ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதன்படி, 'அடுத்த ஆண்டு 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் இரண்டு கட்ட தேர்வுகளை எழுத வேண்டிய அவசியம் இருக்காது' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.