பதவி மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியா் பணி நியமனம்: ஜி.கே.வாசன் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 17, 2022

பதவி மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியா் பணி நியமனம்: ஜி.கே.வாசன்

Tamaga leader GK Vasan has insisted that the appointment of a physical education teacher should be based on seniority. A statement issued by Ava on Saturday in this regard: -

The work of physical education teachers in Tamil Nadu schools is a very important task. Physical education teachers are registered with the employment office and have been facing government service for the last 25 years on the basis of registered seniority. In this situation it is not appropriate to say that physical education teachers are employed through the teacher qualification system.

He says the time to study is very limited as sports teachers need more time to engage in sports training. Therefore, it has been stated that physical education teachers should be employed on the basis of registered seniority

பதவி மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியா் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியா்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருக்கிறது. உடற்கல்வி ஆசிரியா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 25 ஆண்டுகளாக பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப் பணியை எதிா்நோக்கி உள்ளனா். இந்த நிலையில் ஆசிரியா் தகுதி தோ்வு முறையின் மூலம் உடற்கல்வி ஆசிரியா்களை பணி நியமனம் செய்யப்படுவதாகக் கூறுவது ஏற்புடையது அல்ல.

விளையாட்டு ஆசிரியா்களுக்கு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட அதிக நேரம் தேவைப்படுவதால், படிப்பதற்கான நேரம் மிகவும் குறைவு எனக் கூறுகின்றனா். எனவே, பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியா்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.